ஜன நாயகன் ஆடியோ லான்ச் லைவ் இல்லை.. எந்த சேனலில்.. எந்த தேதியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

சென்னை: அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தவெக தொடர்பான எந்தவொரு அரசியல் அடையாளங்களுக்கும் அனுமதி இல்லை என மலேசிய அரசு கண்டிப்புடன் சொல்லியிருக்கிறது.

Jana Nayagan Audio Launch is no Live and it telecast on Zee Tamil on this date
Photo Credit:

இந்நிலையில், ஜன நாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள விஜய்யின் தீவிர ரசிகர்கள் லைவில் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், லைவ் இல்லை என்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜன நாயகன் லைவ் இல்லை: விஜய்யின் குட்டிக் கதையை டிசம்பர் 27ம் தேதி ரசிகர்கள் லைவாக பார்க்கவோ கேட்கவோ முடியாது. மலேசியாவுக்குச் செல்லும் ரசிகர்கள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து அனுப்பினால் மட்டுமே அங்கே நடக்கும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவில் கசியும். ஏனென்றால், ஜன நாயகன் ஆடியோ லான்ச் லைவ் கிடையாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜீ தமிழில் ஆடியோ லான்ச்: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ள ஜீ நிறுவனம் அதன் ஆடியோ லான்ச் உரிமத்தையும் பெற்றுள்ளதாம். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஜன நாயகன் ஆடியோ லான்ச் திரையிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜனவரி 4ம் தேதி தான் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

டிஆர்பி எகிறும்: சன் டிவியில் விஜய்யின் பாடல்கள் கூட போடாமல் உள்ள நிலையில், ஜீ தமிழில் விஜய்யின் ஜன நாயகன் ஆடியோ லான்ச் ஒளிபரப்பானால் டிஆர்பி எகிறும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆடியோ லான்ச் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியா ரசிகர்கள் ரெடி: மலேசியாவின் விஜய் ரசிகர்கள் இப்போதே அந்த மைதானத்துக்கு சென்று ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு தளபதியை வரவேற்று வருகின்றனர். விஜய் நாளை மலேசியாவுக்குச் செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் ஜன நாயகன் படக்குழுவினரும் மலேசியாவுக்கு பறக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X