பாலிவுட்டில் சேட்டை செய்யும் விஜய் பட நடிகை.. லிப் லாக் காட்சியை கத்தரி போட்டு தூக்கிய சென்சார் போர்டு!

சென்னை: பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை பூஜா ஹெக்டே, தளபதியின் 69வது படமான ஜனநாயகன் படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஹிந்தியில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக 'தேவா' என்ற படத்திலும் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த படம் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே படு நெருக்கமாக இருந்த காட்சியை சென்சார் போடு கத்திரிப்போட்டு தூக்கி உள்ளது.

pooja hedge deva censor board

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்விப்படமாக ஆனதால், தெலுங்கு பக்கம் சென்றார் பூஜா. அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வந்த புட்டமொம்மா பாடலை இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இந்தபடத்தை தொடர்ந்து , பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், ராம் சரணுடன் ஆச்சார்யா, விஜய்யுடன் பீஸ்ட், சல்மான் கான் உடன் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என பல நடிகர்களுடன் நடித்தார். ஆனால், அதில் எந்த படமும் வெற்றிப்பெறவில்லை.

pooja hedge deva censor board

நடிகை பூஜா ஹெக்டே: இருந்த போதும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பூஜா ஹெக்டே தொடர்ந்து போராடி வருகிறார். பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும், நடிகையின் வசீகரமான அழகால் நடிகையின் மார்க்கெட் சரியாமல் அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யின் 69வது படமான ஜனநாயகன் படத்தில் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்டானது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

pooja hedge deva censor board

முத்தக்காட்சி நீக்கம்: இந்நிலையில்,பூஜா ஹெக்டே பாலிவுட்டில் தேவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 31ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. மேலும் படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே 6 வினாடிகள் லிப்-லாக் காட்சியை நீக்கியும், இன்னும் சில காட்சிகளையும் நீக்கி உள்ளது. படத்தின் ரன்னிங் டைம், 2 மணி, 36 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகளாக உள்ளது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் இப்படத்தில், ஷாகித் கபூர் போலீஸ் அதிகாரி தேவ் ஆம்ப்ரேவாக நடித்துள்ளார். பூஜா ஹெட்ஜைப் தியாவாக என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், பவைல் குலாட்டி, கிரிஷ் குல்கர்னி, குப்ரா சைட் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ், ஹிந்தியில் மட்டுமே நடித்து வரும் பூஜா ஹெக்டே, இந்த தேவா படம் பாலிவுட்டில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பூஜா ஹெக்டே பெரிதும் நம்பி உள்ளார்.

pooja hedge deva censor board

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X