குமுதா என்னங்க பெரிய குமுதா.. சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தெரியுமா?.. மாசம் இத்தனை லட்சமா?

சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ஜனனி அசோக் குமார். தொலைக்காட்சி தொடர்கள், சோஷியல் மீடியா பதிவுகள் மற்றும் ரசிகர்களுடனான நெருக்கமான தொடர்பு ஆகியவற்றின் மூலம் அவர் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தொடர்ந்து பல நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் முறைகளை ஏற்படுத்தி ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் குமுதாவாக நடித்த நந்திதா ஸ்வேதா சப்ஸ்கிரிப்ஷனில் இறங்கியது பலரையும் ஷாக் ஆக்கியது. அவருக்கு வெறும் 80 பேர் தான் இதுவரை சப்ஸ்கிரைபர்களாக சேர்ந்துள்ளனர்.

Janani Ashok Kumar earns 6 lakhs per month via Instagram Subscription shocks fans

ஆனால், மாப்பிள்ளை, இதயம் சீரியல்கள் மூலம் பிரபலமான ஜனனி அசோக் மாதம் 6 லட்சத்துக்கு மேல் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வருகிறாராம்.

ஜனனி அசோக் குமார் யார்?: தமிழகத்தைச் சேர்ந்த ஜனனி அசோக் குமார், தமிழ் தொலைக்காட்சி உலகில் பல்வேறு தொடர்களின் மூலம் பிரபலமானார். குறிப்பாக "மாப்பிள்ளை" தொடரில் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் அவருக்கு பரவலான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னர் பல தொடர்களிலும் திரைப்படங்களிலும் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் "இதயம்" தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக ஊடகங்களில் தனி செல்வாக்கு: நடிகையாக மட்டுமல்லாமல், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சராகவும் ஜனனி அசோக் குமார் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 12 லட்சத்திற்கும் (1.2 மில்லியன்) அதிகமானோர் பின்தொடர்கின்றனர். பயணங்கள், ஃபேஷன், புகைப்படங்கள், தினசரி வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் போன்றவற்றை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

Janani Ashok Kumar earns 6 lakhs per month via Instagram Subscription shocks fans

இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் வருமானம்: கடந்த சில மாதங்களாக ஜனனி அசோக் குமார் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்று, அவரது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் சேவை. ரசிகர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்தி, பொதுமக்களுக்கு கிடைக்காத பிரத்யேக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட அப்டேட்களைப் பெறும் வசதியை அவர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

6 லட்சம் வருமானமா?: சமூக ஊடக விவாதங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவும் தகவல்களின்படி, இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையின் மூலம் அவர் மாதம் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. 1644 பேர் இன்ஸ்டாகிராமில் அவரை சப்ஸ்கிரைப் செய்து எக்ஸ்க்ளூசிவாக பல அரிய விஷயங்களை பார்த்து வருகின்றனர். 390 ரூபாய் ஒரு ஆளுக்கு என்றால் 1644 பேருக்கு கணக்கிட்டால் 6 லட்சத்தை தாண்டுகிறது. நந்திதா ஸ்வேதா எல்லாம் இந்த இலக்கை அடைய வெகுகாலம் ஆகும் என்கின்றனர்.

எங்கேபோய் முடியுமோ?: தொலைக்காட்சி நட்சத்திரமாக அறிமுகமான ஜனனி அசோக் குமார், இன்று சமூக ஊடக உலகிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறுகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஜிட்டல் தளங்கள் எப்படி புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதற்கும் அவர் ஒரு உதாரணமாக திகழ்கிறார் என்கின்றனர். மேலும், இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ? மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கவே நாக்குத் தள்ளுதே என படித்த இளைஞர்கள் எல்லாம் புலம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X