வீட்டில் நடந்த துக்க சம்பவம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் ஜனனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஜனனி, தனது தாய்மாமா இறந்தது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்து வருகிறார்.

Recommended Video

தாய் மாமா இறந்ததை ஏன் பிக் பாஸ் ஜனனியிடம் சொல்லவில்லை?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஜனனி, தனது தாய்மாமா இறந்தது தெரியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத், ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். தற்போது நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத் ஆகியோருடன் சண்டையும் சச்சரவுமாக நகர்கிறது நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

ஜனனி அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் பேலன்ஸ் செய்வது போல் பட்டும் படாமல் அதிக சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கிறார் ஜனனி.

தான் உண்டு, வேலையுண்டு

தான் உண்டு, வேலையுண்டு

மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் சக போட்டியாளர்களிடம் எந்நேரமும் சண்டை போட்டு வரும் நிலையில் தான் உண்டு தனது வேலையுண்டு என செல்கிறார் ஜனனி.

ஜனனி மாமா மரணம்

ஜனனி மாமா மரணம்

இந்நிலையில் ஜனனி வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. இது தெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்து வருகிறார். அதாவது ஜனனியின் தாய் மாமா மரணமடைந்துவிட்டார்.

தாய் மாமா இறந்த செய்தி

தாய் மாமா இறந்த செய்தி

இதுதெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சிரித்துபேசி கலகலப்பாக இருந்து வருகிறார். தனது தாய்மாமா இறந்த செய்தியை அறிந்தால் ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார்.

100 நாட்கள் போட்டியாளர்கள்

100 நாட்கள் போட்டியாளர்கள்

இதன்காரணமாக ஜனனிக்கு தனது தாய் மாமா இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.

தொடர்பு இருக்கக்கூடாது

தொடர்பு இருக்கக்கூடாது

அவர்களுக்கு வெளியில் நடக்கும் எந்த விஷயமும் தெரிவிக்கப்படாது. வெளி நபர்களுடன் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்த தொடர்பும் வைத்திருக்ககூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X