ஓவியா மாதிரியே செய்த ஜனனி: தான் முட்டாள் என்பதை ஒப்புக் கொண்ட ஐஸ்

By Siva

Recommended Video

Bigg Boss 2 | ஜனனி, மும்தாஜ் , ஐஸ்வர்யா சண்டை | Mumtaj Janani Aishwarya Fight

சென்னை: ஓவியா மாதிரியே நடந்து கொண்டிருக்கிறார் பிக் பாஸ் 2 போட்டியாளர் ஜனனி.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஓவியாவுக்கு கிடைத்த புகழை பார்த்து நடிகைகள் எல்லாம் அசந்துவிட்டார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் அடுத்த ஓவியா யார் என்பதை தெரிந்து கொள்ளவே பலரும் நிகழ்ச்சியை பார்க்கத் துவங்கினார். ஆனால் ஒரே ஓவியா தான், அடுத்த ஓவியா எல்லாம் கிடையாது என்பது தெரிந்தது.

யாஷிகா அவ்வப்போது ஓவியா மாதிரி ஏதாவது செய்ய முயற்சித்தும் பலனில்லை.

ஜனனி

வீட்டின் தலைவரான யாஷிகா ஜனனிக்கு முதலை விருதை அளித்தார். அதாவது நீலிக் கண்ணீர்விட்டு காரியம் சாதிப்பவராம் ஜனனி. இது எனக்கு பொருந்தாது என்று கூறி விருதை வாங்க மறுத்துவிட்டார் ஜனனி. ஜனனி செய்தது சரி தான். அவர் எப்பொழுது நீலிக் கண்ணீர் வடித்துப் பார்த்தாராம் யாஷிகா.

ஜனனி

ஜனனி

மகத்தும், ஜனனியும் நட்பாக இருப்பது யாஷிகாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் சம்பந்தமே இல்லாமல் அவருக்கு முதலை விருதை அளித்துள்ளார். ஜனனி விருதை ஏற்காமல் நடையை கட்டியது ஓவியாவை நினைவூட்டுகிறது. கடந்த சீசனில் சினேகன் ஓவியாவுக்கு சோம்பேறி விருதை கொடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி

அமைதி

ஜனனியை வெஷ பாட்டில் என்று கூறியதற்கு ஏற்றபடி அவர் நடக்கவில்லை. தற்போது எல்லாம் யார் அன்பு காட்டுகிறாரோ அவர் பின்னாலேயே சென்று விடுகிறார். பத்தோடு ஒன்னு பதினொன்றாக இருக்கும் ஜனனியை பார்த்தால் வெஷ பாட்டில் ஃபீல் வருவது இல்லை.

ஐஸ்வர்யா

மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருதை அளித்தார். அதற்கு ஐஸ்வர்யாவோ ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு விருது கொடுக்கிறது என்று திமிராக கூறினார். ஆக, அவர் முட்டாள் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். அது போதும் ஐஸ்வர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X