ஐஸ்வர்யா மீது கொலவெறியில் இருக்கும் ஜனனி, ரித்விகா, விஜி

By Siva

சென்னை: பிக் பாஸ் ஃபைனலிஸ்டாக ஐஸ்வர்யாவுக்கு தகுதியே இல்லை என்று ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, மும்தாஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 5 வாரம் தான் உள்ளது. இந்நிலையில் ஃபைனலிஸ்டாக வர யாருக்கு தகுதி இல்லை என்ற கேள்வியை கேட்டார் கமல் ஹாஸன்.

அதற்கு போட்டியாளர்கள் அளித்த பதில் சுவாரஸ்யமாக இருந்தது.

ஜனனி

ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்டாக தகுதி இல்லாதவர் ஐஸ்வர்யா என்று தெரிவித்து பார்வையாளர்கள் கை தட்டல்களை பெற்றார் ஜனனி. அவர் இதுவரை நாமினேஷனுக்கே போகவில்லை. இதுவரை ஒரு முறை தான் நாமினேட் ஆனார். நாங்கள் எல்லாம் பல முறை நாமினேட் ஆகி மக்கள் சொல்லி இங்கே இருக்கிறோம். ஒரு முறை நாமினேட் ஆகி மக்களிடம் சென்று திரும்பி வந்தால் தகுதி இருக்கிறது என்பதை ஏற்போம் என்றார் ஜனனி. சும்மா நச்சுன்னு சொன்னீங்க ஜனனி.

கோபம்

கோபம்

ஒரு முறை ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டால் அவர் நிச்சயம் எவிக்ட் ஆகிவிடுவார் ஜனனி. அந்த அளவுக்கு பார்வையாளர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இதை நன்கு தெரிந்து வைத்துள்ள பிக் பாஸ் அவரை நாமினேட் செய்ய விடாமல் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். அவர் எத்தனை நாட்களுக்கு காப்பாற்றுவார் என்று நாமும் பார்த்துவிடுவோம்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஜனனி சொன்னதை கேட்ட ஐஸ்வர்யாவோ மக்கள் கடவுள் போன்றவர்கள். அதனால் கடவுள் தான் காப்பாற்றுகிறார் என்று சிரித்து மழுப்பினார். ஐஸ்வர்யா உங்களை காப்பாற்றுவது மக்கள் அல்ல பிக் பாஸ் மட்டுமே. உங்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து எப்பொழுது விரட்டிவிடலாம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் நீங்கள் கூறிய அந்த மக்கள்.

ரித்விகா

ரித்விகா

ஜனனி சொன்னதை தான் ரித்விகாவும் கூறினார். ஐஸ்வர்யாவை கடவுள் அல்ல அவரின் தோழி இரண்டு முறை காப்பாற்றியுள்ளார் என்று நமக்கு தெரிந்த விஷயத்தையே கூறினார் ரித்விகா. யாஷிகா மூலம் கடவுள் தன்னை காப்பாற்றுவதுாக சப்பைக் கட்டு கட்டினார் ஐஸ்வர்யா. உங்களை ஒரு முறை நாமினேட் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். அதன் பிறகு யார் உங்களை காப்பாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

தப்புமா

தப்புமா

அந்த இரண்டு முறையும் ஐஸ்வர்யாவை கடவுள் காப்பாற்றவில்லை என்கிறார் ரித்விகா என்று கூறிய கமல் தப்பும்மா என்றதை பார்த்தால் ஆண்டவருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது. நிகழ்ச்சியை நடத்துபவர் கமல், அவருக்கு தெரியாதா ஐஸ்வர்யாவை காப்பாற்றுவது பிக் பாஸ் தான் என்று. நீங்க நடத்துங்க கமல்.

மும்தாஜ்

மும்தாஜ்

விஜயலட்சுமியும், மும்தாஜும் ஐஸ்வர்யாவுக்கு தகுதி இல்லை என்றனர். யாஷிகா இல்லாவிட்டால் ஐஸ்வர்யாவால் தாக்குப்பிடிக்க முடியாது என்றார் விஜயலட்சுமி. ஐஸ்வர்யா நாமினேஷனே ஆகாமல் உள்ளார் என்றார் மும்தாஜ். அவ்வளவு சீக்கிரம் ஐஸ்வர்யாவை பிக் பாஸ் நாமினேட் செய்ய மாட்டார். அப்படியே நாமினேட் ஆனாலும் முன்பு செய்தது போன்று விதிமுறைகளை மாற்றி காப்பாற்றிவிடுவார் மோமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X