Aranmanai kili serial: ஜானு மூலிகையோட வந்துட்டா துர்கா பொறாமையில்!

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஒரு மலை தாண்டி அடுத்த ஆலங்கட்டி மலைக்கு போன ஜானு, சரியான மூலிகையுடன் திரும்பி ஆஷ்ரமத்துக்கு வர்றா.

மாற்று வழி சொல்லி, புதைக் குழியில் மாட்டிவிடப் பார்த்து, அதே மாதிரி ஜானுவும் புதை குழியில் விழுந்துடறா. எல்லாம் துர்கா செய்த ஏற்பாடு. துர்கா ஜானுவின் புருஷன் அர்ஜுனின் பெரியம்மா பொண்ணு.

முதலில் மூலிகையில் பூ நாகத்தை விட்டு, ஜானுவை கொத்த வச்சாயிற்று. அதிலும் ஜானு பிழைச்சுகிட்டு, இதோ இப்போ மூலிகையுடன் வந்துட்டா. இனியும் அந்த மூலிகையை பயன்படுத்த விடாம சதி செய்ய பார்க்கறா துர்கா.

அம்மா துர்கா

அம்மா துர்கா

துர்காவின் அம்மாவுக்கு எதோ ஒரு காரணத்தால் மன நிலை சரியில்லாமல் போயிருந்து. அவங்களை அன்பா கவனிச்சு, மனுஷியா மாத்தினவ ஜானு. பிறகும் அவள்மேல் துர்கா எப்போதும் கோவமாக இருப்பதும்,வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று நினைப்பதும் ஏன் என்றுதான் புரியவில்லை. உயிருக்கு உயிரா நினைக்கும் அம்மாவை காப்பாத்தி குடுத்த ஒரு பொண்ணு மேல அந்த தாய் பெத்த பெண்ணுக்கே கொலை வெறி வருமா?

இப்படி எல்லாமா?

இப்படி எல்லாமா?

கதையை நகர்த்த இப்படி எல்லாமா கட்சிகளை வைப்பீங்க? எந்த வைத்தியருங்க...மலை தாண்டி மலைக்கு போயி, அதுவும் தனி ஒரு பொண்ணா போயி மூலிகை எடுத்துட்டு வான்னு இரக்கமே இல்லாம சொல்லுவார்? அப்படி எடுத்துட்டு வந்த மூலிகையை துர்கா மறுபடியும் வீணாக்க துடிக்கிறாள்.. அர்ஜுன் வைத்தியத்தை கெடுக்கணும்னு மறுபடியும் மூலிகையை சுவாமிஜி எங்கே வச்சிருப்பார்னு தேடறா.

இவ்ளோ மர்மம்

இவ்ளோ மர்மம்

பணக்காரங்கள் வீட்டில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே... அப்படி இருக்கையில் மனிதபிமானமே இல்லாமலா அவர்கள் வீட்டில் மனிதர்கள் இருப்பார்கள். ஒரு ஏழை பெத்த பொண்ணு துர்கா.அவளை வீட்டை விட்டு துரத்த இவ்வளவு சதி வேலைகள் பார்க்கணுமா?

ஜானு அர்ஜுனுக்கு

ஜானு அர்ஜுனுக்கு

நல்ல பொன்ண்ணு ஜானு, அவள் வேற ஒரு நல்லவனை கல்யாணம் செய்துக்கிட்டு, நல்லா வாழணும்னு நினைச்சுத்தான் அம்மா,அக்கா என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு,விவாகரத்துக்கு அர்ஜுன் சம்மதிக்கறான். இதுல மட்டும்தான் லாஜிக் இருக்கு. மற்ற முழுக் கதையும் சுத்த வேஸ்ட். எதுக்கு இப்படி கதையை இழுக்க துர்க்கான்ற ஒரு பெண்ணுக்குள் இத்தனை வன்மத்தை திணிக்கறீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X