ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 12ந் தேதி: கெட்டி மேளம் முதல் அயலி வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியல், அஞ்சலி வீட்டில் இருக்கும் மகேஷ், அஞ்சலி ரூம் முழுக்கவும் குழந்தை போட்டோவையும் ஓட்டுவது மட்டுமல்லாமல் தனது போட்டோவையும் வைத்திருக்க இதை பார்த்து அஞ்சலி இதெல்லாம் எதுக்கு பண்ணிக்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறாள். மகேஷ் நீ தினமும் நல்ல பாட்டை கேக்கணும், குழந்தைங்களோட போட்டோவை பாக்கணும், அதே மாதிரி என்னோட போட்டோவை பாத்தா தானே அந்த குழந்தை என்ன மாதிரி வரும் என்று சொல்கிறான்.
இதைக்கேட்டு அஞ்சலி அந்த குழந்தை கண்டிப்பா உன்னை மாதிரி வளரக்கூடாது.. இறந்து போன எங்க அப்பாவை எனக்கு குழந்தையா பிறக்கணும்னு நினைக்கிறேன். அந்த குழந்தை ஒரு காலமும் உன்ன மாதிரி வளர விடமாட்டேன் என்று சொல்கிறாள். மேலும் மகேஷ் போட்டோவை தூக்கிப்போட்டு இனிமே இந்த ரூமுக்குள்ள வர வேலை எல்லாம் வச்சுக்காத என துரத்தி விடுகிறாள். பிறகு அஞ்சலி தூக்கியதும், மீண்டும் ரூமுக்கு வரும் மகேஷ் அவளது வயிற்றில் தலை வைத்து எமோஷனலாக பேசுகிறான். நான் உங்க அப்பாவ கொல்லல அவர் என் கூட தான் இருக்காரு. ஆனா அவரை கொல்லவும் மாட்டேன் உங்ககிட்ட ஒப்படைக்கவும் மாட்டேன் என்று சொல்கிறான். பின், இங்கிருந்து வெளியே வரும் மகேஷ் நேராக முருகன் ரூமுக்கு செல்கிறான். முருகன் அசந்து தூங்கிக் கொண்டிருக்க கையில் கத்தியோடு நிற்கிறார். இதை, தூக்கத்தில் இருந்து எழும் முருகன் ரேவதி மகேஷை பார்த்து அலற அனைவரும் கூடி விடுகின்றனர். அஞ்சலி என் அண்ணன கொல்றதுக்காகத்தான் இந்த வீட்டுக்கு வந்தியா என கோபப்படுகிறாள்.

பிறகு பாட்டி கீழே வந்து எதுக்கு வெளியே நின்னுட்டு இருக்க என்று கேட்க அம்பிகாவோட பையன் வந்திருக்காரு.. போன் பேசிட்டு இருக்காரு, உள்ள வந்ததும் கதவு மூடிட்டு போகலாம்னு காத்திருப்பதாக சொல்ல, பாட்டி, நீ மேல போ கதவை நான் மூடிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறாள். பிறகு மகா சென்றதும் திரு பாட்டியை பார்க்க முடிச்சுட்டு வரேன் என்று கிளம்பி விடுகிறான். அதன் பிறகு பக்கத்து தெருவுக்கு வந்து போலீசார் சொன்ன வீட்டில் விசாரிக்க அந்த பொண்ணு ஏதோ பிரச்சனைன்னு சொல்லுச்சு.. பக்கத்தில் உள்ள தெருவுல தான் வீடுன்னு சொல்லுச்சு என்று சொல்ல திரு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

அயலி: வீட்டிற்கு வக்கீல் வந்து அடுத்து உதயபெருமாளை வெளியே எடுக்க என்ன செய்வது என்பது குறித்து பேசி விட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து இரண்டு போலீஸ் வீட்டிற்கு வருகின்றனர். உதய பெருமாள் குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்க இந்திராணி உங்க உயர் அதிகாரி யார் என்று விசாரிக்க அவர்கள் அதையெல்லாம் சொல்ல முடியாது, சீக்ரெட் என்று சொல்கின்றனர். உதயபெருமாள் குறித்த தகவல்களை பகிர வேண்டாம் என்று அயலி கண் காட்டுகிறாள். இதையடுத்து ஜோதிடர் ஒருவர் வீட்டிற்கு வருகிறார், இந்திராணியை சந்தித்து பேச செலவநாயகி தான் அவரை வர சொன்னது என்று தெரிய வருகிறது. உதய பெருமாள் ஜெயிலில் இருப்பதால் வீட்டில் பூஜை செய்ய வர சொன்னதாக சொல்கிறாள். அடுத்த நாள் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க இந்திராணி இந்த பூஜையில் அயலி, சிவாவும் கலந்து கொள்வார்கள் என்று சொல்ல ரித்திகா இவங்க எதுக்கு கலந்துக்கணும் என்று கோபப்படுகிறாள்.


Click it and Unblock the Notifications











