ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 2ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில் ரவுடிகள் அந்த ஏஜென்ட்டை தாக்க அஞ்சலி இதை பார்த்து காப்பாற்ற போக அந்த வழியாக வந்த வெற்றி ரவுடிகளுடன் சண்டை போட்டு பைலை கைப்பற்ற கடைசி ரவுடிகள் அந்த பைலை தூக்கிச் செல்கிறான். ஆனால் அஞ்சலி அதுக்குள்ள இருக்க பேப்பர்களை எடுத்துட்டேன் என்று சொல்கிறாள். பிறகு அந்த பேப்பர்களை பார்க்க அதில் சிவராமன் இறந்த தேதியே இல்லை என்பது தெரியவருகிறது. இதனால் அஞ்சலிக்கு அப்பா உயிரோடுதான் இருக்காரு, எனக்கு என்னமோ மகேஷ் மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொல்கிறாள். ரவுடிகள் ஃபைலில் பேப்பர்கள் இல்லாத விஷயத்தை மகேஷ்க்கு தெரியப்படுத்த அவன் டென்ஷன் ஆகிறான்.

இதைத்தொடர்ந்து அஞ்சலி மற்றும் வெற்றி என இருவரும் மகேஷ் வீட்டுக்கு வந்து பூட்டி வைத்திருக்கும் ரூம் கதவை திறக்க சொல்லி பிரச்சனை செய்ய ஒரு கட்டத்தில் மகேஷ் ரூமைத் திறக்க அங்கே சிவராமன் போட்டோவுக்கு மாலை போட்டு விளக்கேற்றி பூஜை செய்து இருப்பது தெரிய வருகிறது. நீங்க மாமாவ மறந்து இருந்தாலும் நான் அவரை மறக்காமல் தினமும் அவர்கிட்ட பேசிகிட்டு தான் இருக்கேன் என்று சொல்கிறான். மேலும் வெற்றியை நீங்க ஏன் சகல எப்படியும் என் பொண்டாட்டி கூடவே சுத்திக்கிட்டு இருக்கீங்க உங்க வீட்ல பிரச்சனையே இருக்காதா? என கிண்டல் அடித்து அனுப்புகிறான். ஆனாலும் அஞ்சலிக்கு சந்தேகம் தீராமல் இருக்க வெற்றி உண்மையை கண்டுபிடிக்க ரகசிய திட்டமொன்றை சொல்கிறான். மறுபக்கம் தீபா வாந்தி எடுக்க அவள் கர்ப்பம் என தெரிந்தது அனைவரும் சந்தோஷமடைகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: ரத்னா அம்மாவான நிலையில், பரணி சண்முகத்திடம் தனக்கு குழந்தை இல்லையே என வருத்தப்படுகிறாள். அம்மாவாக வேண்டும் என்ற ஆசையை பரணி வெளிப்படுத்த சண்முகம் முருகனிடம் பரணி அவ ஆசைப்பட்ட மாதிரி அம்மாவாகனும், கட்டப்போற ஹாஸ்பிடல் அவளுக்கு முதல் பிரசவம் நடக்கணும் என வேண்டிக் கொள்ள பரணி இதைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு பேங்க் ஆபீஸர்ஸ் டாக்குமெண்ட்களை சரி பார்த்து லோன் கொடுப்பதாக சொல்ல கோவில் நிர்வாகத்தின் தரப்பில் ஒரு கமிட்டி அமைக்கின்றனர். கமிட்டியின் தலைவராக சண்முகத்தையே தேர்வு செய்ய சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இதனால் அவர் சண்முகத்திடம் நீ எப்படி ஹாஸ்பிடல கட்டி முடிக்கிறேன் என்று பார்க்கிறேன் என்று சவால் விட பரணி உங்களால ஒன்னும் பண்ண முடியாது என பதிலுக்கு சவால் விடுகிறாள். இதனால் சௌந்தரபாண்டி அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் பாண்டியம்மாளில் மகள் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் தான் என் அம்மா கொலை செய்தார் என போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில், வர்ஷினியை ஐஸ் கட்டி மீது நிற்க வைத்து தற்கொலை போல் சித்தரிக்க திட்டம் போடுகின்றனர். ஆனால், இசை தற்கொலை கடிதத்தில் இருப்பது வர்ஷினியின் கையெழுத்து இல்லை என சொல்கிறாள். இதையடுத்து, இசை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து எப்எம் ரேடியோ மூலமாக காரின் நம்பரை கண்டு பிடிக்கிறாள். இதனைத் தொடர்ந்து இந்த காரை டிரேஸ் செய்து விசாரிக்கின்றனர். மறுபக்கம் விஷால் பக்கத்து ரூமில் இருந்து தண்ணீர் வெளியே வருவதை பார்த்து சந்தேகமடைந்து கீழே சென்று ரூம் சாவி வாங்கி வந்து கதவை திறந்து பார்க்க வர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்து அவளை காப்பாற்றி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். பிறகு இதற்கெல்லாம் காரணம் பானுமதியாக தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் கொள்கின்றனர். பானுமதி வீட்டுக்கு சென்று சத்தம் போடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X