ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 5ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் மகேஷ் ஊரில் இல்லை என்ற விஷயம் அறிந்த அஞ்சலி எனக்கு என்னமோ சந்தேகம் இருக்கு என்று வெற்றிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவன் மகேஷ் அன்பா பேசுவது போல நடிச்சு தான் உண்மையை வாங்கணும் என்று ஐடியா கொடுக்கிறான். மறுபக்கம் சிவராமனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முடிந்து விட டாக்டர் நீங்க கொடுத்த முகம் மாதிரியும் மாறலாம் வேறு முகம் மாதிரியும் மாறலாம் ஆனால் ஆப்ரேஷன் ஓவர் என சொல்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அஞ்சலி ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்க வீட்டு வாசலில் கேப் வந்து நிற்கிறது. மகேஷ் சார் அனுப்பியதாக சொல்லு அஞ்சலி எனக்கு கேப் எதுவும் தேவையில்லை என்று கோபப்பட்டு திட்டுகிறாள். பிறகு கம்பெனிக்கு வந்து மகேஷை பிடித்து திட்டுகிறாள். அதன் பிறகு மகேஷ் மொத்த தொழிலாளர்களுக்கும் கேப் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் என் வாழ்க்கையில முக்கியமான நபரை சந்தித்ததால் உங்கள் எல்லாருக்கும் இன்றைக்கு விருந்து என்று சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். குடிக்க கொடுத்த ஜூஸில் போதைப் பொருளை கலந்து மகேஷுக்கு கொடுத்து விடுகிறாள் அஞ்சலி.

அண்ணா : பேங்க் ஆபீஸர்ஸ் டாக்குமெண்ட்களை சரி பார்த்து லோன் கொடுப்பதாக சொல்ல கோவில் நிர்வாகத்தின் தரப்பில் ஒரு கமிட்டி அமைக்கின்றனர். கமிட்டியின் தலைவராக சண்முகத்தையே தேர்வு செய்ய சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இதனால் அவர் சண்முகத்திடம் நீ எப்படி ஹாஸ்பிடல கட்டி முடிக்கிறேன் என்று பார்க்கிறேன் என்று சவால் விட, பரணி உங்களால ஒன்னும் பண்ண முடியாது என பதிலுக்கு சவால் விடுகிறாள். இதையடுத்து சௌந்தரபாண்டி, தனது அக்காவின் மகளை அழைத்துக்கொண்டு போலீஸ் உயர் அதிகாரியிடம் சென்று, பாண்டியம்மாவை கொலை செய்தது சண்முகம் தான், இதுபற்றி புகார் கொடுத்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார். இதையடுத்து, இன்று மருத்துவமனை கட்டுவதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்க , புதிதாக வரும் போலீஸ் சண்முகத்தை, முத்துப்பாண்டி கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

பாரிஜாதம்: ஸ்ரீஜா பற்றி உண்மை தெரியாத விஷால், அவளை நினைத்து தினமும் குடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு ஒரு முடிவு எடுக்க நினைத்த இசை, விஷாலை சந்தித்து இனிமே நீங்க குடிக்க கூடாது. நீங்க குடிச்சா நானும் குடிப்பேன் என்று சொல்லி சரக்கை எடுத்து குடித்து விடுகிறாள். இதனால் இசை பதில் தள்ளாடி ஆர்ப்பாட்டம் செய்ய விஷால் அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறான். வரும் வழியில் இசை ஐஸ்கிரீம் வேண்டும் இது வேண்டும், அது வேண்டும் என கலாட்டா செய்கிறாள். ஹோட்டல் கடையில் சாப்பிட வருவர்களிடம் இசை குடித்துவிட்டு வரம்பு மீறி பேச, விஷால் செய்வதறியாது தவிக்கிறான். பிறகு வீட்டில் யாருக்கும் தெரியாமல், இசையை உள்ளே அழைத்து வந்து ரூமுக்குள் படுக்க வைக்கிறான். அப்போது விஷால், இசையும் என்னால் இப்படித்தான் கஷ்டப்பட்டு இருப்பால் என்பதை நினைத்து வருத்தப்படுகிறான். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











