ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 7ந் தேதி: கெட்டிமேளம் முதல் திருமாங்கல்யம் வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்
சென்னை: அஞ்சலி சிவராமன் முகமூடியை அணிந்து மகேஷ் முன்பு நிற்க அவன் சிவராமன் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை உளர இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அஞ்சலி உண்மை அறிந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள், கொஞ்சம் கொஞ்சமாக மகேஷ்க்கு போதை தெளிய அவன் லாஸ்ட்டாக அஞ்சலி தான் ஜூஸ் கொடுத்தா என்று அறிந்து சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து மகேஷும் ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறான். இங்கே அஞ்சலி எல்லா வார்டிலும் சென்று சிவராமனை தேட ஒரு கட்டத்தில் மகேஷ் வந்து விடுகிறான், அஞ்சலி இங்க என்ன பண்றீங்க என்று விசாரிக்க நான் ரெகுலரா இங்க தான் செக்கப் வருவேன் என்று சொல்கிறான்.
பிறகு ஆப்ரேஷன் செய்த டாக்டர் அங்கு வர மகேஷ் கண்ணை காட்ட அவனும் ஆமாம் என்று சொல்லி மகேஷை காப்பாற்றுகிறான், மறுபக்கம் துளசி அத்தை மாமாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணாமல் என்று ஐடியா கொடுக்க வெற்றி சூப்பர் ஐடியா ஆனால் இதை இப்படியே சொன்னா ஓகே சொல்ல மாட்டாங்க என்று திட்டம் ஒன்றை தீட்டுகிறான். பிறகு தியா ஒரு போஸ்டர் பார்த்தேன். அதுல ஒரு தாத்தா பாட்டிக்கு கல்யாணம் ஆகுற மாதிரி போட்டோ போட்டு இருந்தாங்க, வயசானவங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவாங்க என்று கேட்க வெற்றி அது 60-ம் கல்யாணம் என்று சொல்லி அப்படியே வீட்டிலும் பேசி அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குகிறான். ஈஸ்வரமூர்த்தி கல்யாணதிற்கான வேலைகளை தொடங்க சொல்கிறார்.

பாரிஜாதம்: குடிபோதையில் இருந்த இசையை வீட்டுக்கு தெரியாமல் ரூமுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அடுத்த நாள் காலையில் சுபத்ரா ஸ்ரீஜா மற்றும் இசை என இருவருக்கும் தாலி பிரித்து போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். ராகவன் வர்ஷினி சந்திச்சு நீ இதுக்கு எல்லாம் கவலைப்படாத இருவரும் ஃபங்ஷன் தான் என்னைக்கு இருந்தாலும் நீ தான் என்னுடைய மனைவி என்று சொல்கிறான். மேலும் ஸ்ரீஜாவிடமும் வர்ஷினி தான் என் பொண்டாட்டி உன்ன என்னைக்கும் அந்த இடத்துல வச்சு பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான். இன்னொரு பக்கம் விஷால் நீ என்ன வேணா பண்ணிக்கோ என்னால இந்த பங்ஷன்ல இருக்க முடியாது என்று சொல்லி குடிக்க கிளம்பி செல்கிறான். பங்ஷனின் போது விஷால் கோவிலுக்கு சென்று இருப்பதாக சொல்லி இசை சமாளிக்க சுபத்ரா அவன் இப்போ இங்க வந்தாகணும் என்று கட்டளை இடுகிறாள்.

திருமாங்கல்யம்: பாட்டி மயங்கி விழுந்ததை பார்த்து கஜேந்திரனும் மோகனவள்ளியும் சந்தோசப்படுகின்றனர். குட்டி பாட்டி மயங்கி கிடப்பதை பார்த்து பதற்றம் அடைகிறான், பிறகு அங்கு வந்த பைரவனும் அதிர்ச்சி ஆகிறான். பசுபதியும் கஜேந்திரனும் பாட்டியை தூக்கி மெத்தையில் படுக்க வைக்க மோகனவள்ளி அவ்வளவு தான் கிழவி போய்டுச்சு, தூக்கி போட வேண்டியது தான் என்று சொல்ல பைரவன் கோபப்படுகிறான். நான் போய் வைத்தியம் செய்யும் பாட்டியை கூட்டிட்டு வருவதாக செல்ல கஜேந்திரன் மோகனவள்ளி ஆகியோர் பதற்றம் அடைகின்றனர். இங்கே மகா அம்பிகா வீட்டுக்கு வந்ததும் கோவில்ல என்ன நடந்துச்சு என்று கேட்க அவள் நடந்த அனைத்தையும் சொல்கிறாள். நீதானே என் பையனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னது என்று சொல்ல மகா ஆமாம் என்று சொல்ல இதை கவிதா ஒட்டு கேட்டு காஞ்சனாவுக்கு தெரியப்படுத்த காஞ்சனா டென்ஷன் ஆகிறாள். அதன் பிறகு குட்டி மகாவுக்கு போன் செய்து பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு என்று சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். மேலும் ஊருக்கு கிளம்ப தயாராக ஓகே கஜேந்திரன் லட்சுமி வந்ததும் அவள் கழுத்தில் தாலியை கட்ட முடிவெடுக்கிறான்.


Click it and Unblock the Notifications











