ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 9ந் தேதி: கெட்டி மேளம் முதல் பாரிஜாதம் வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில், மீனாட்சி கையில் பெரிய கட்டுடன் வீட்டிற்கு வர அதை பார்த்து அபிராமி என்னமா சின்ன காயம்னு தானே சொன்ன என்று கேட்க மீனாட்சி இல்ல அத்தை காயம் கொஞ்சம் பெருசா தான் இருக்கு என்று சொல்கிறாள். இதையடுத்து வீட்டிற்கு வந்த வெற்றியை ஈஸ்வரமூர்த்தி திட்ட வெற்றி அவன் தான் எல்லா வேலையும் பார்த்து இருக்கான். இனிமே யாரும் எங்கேயும் தனியா போய்டாதீங்க என்று சொல்கிறான். ஈஷ்வர மூர்த்தி எல்லாம் துளசியால் வந்தது என்று கோபப்படுகிறார்.
அடுத்து துளசி தியாவுக்கு சாப்பாடு ஊட்டும் போது இன்னைக்கு ஸ்கூல் போகாத என்று சொல்ல தியா எக்ஸாம் இருக்கு என்று சொல்கிறாள், நீ லீவ் போட்டா ஆப்பிள் கேக் வாங்கி தரேன் என்று சொல்ல அப்போது தியா மீனாட்சி பெரியம்மா ஆப்பிள் கட் பண்ணும் போது கையை வெட்டிக்கல. அவங்களா தான் வெட்டிக்கிட்டாங்க என்று சொல்ல துளசி ஷாக் ஆகிறாள். அடுத்து துளசி மீனாட்சியிடம் கையில் எப்படி காயமாச்சு என்று கேட்க மீனாட்சி துளசியின் கேள்விகளுக்கு பதற்றமாக துளசிக்கு சந்தேகம் வருகிறது. அடுத்து ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்த சிவராமன் அங்கிருந்து தப்பி செல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.

இதைத் தொடர்ந்து திரு, நீ எங்க இருக்க என்ன பண்ற எனக்கு தெரிந்தாக வேண்டும் என்று கேட்கிறான். கடையில் காசு கொடுத்துவிட்டு வருவதற்குள் லட்சுமி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். திரு, அவளை தேடி அலைகிறான். லட்சுமி வேக வேகமாக நடந்து வர சென்னையில் அவள் முதல் முதலாக சந்தித்த இன்ஸ்பெக்டர் பார்த்து விடுகிறார். லட்சுமி நீ இங்கே என்னமா பண்ற உன் புருஷன் உன்னை தேடிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல வீடு பக்கத்துல தான் என்று சொல்லி சமாளிக்கிறாள். சரி வா நானே விட்டு விடுகிறேன் என்று இன்ஸ்பெக்டர் அழைத்துச் செல்ல லட்சுமி ஒரு வீட்டைக் காட்டி இதுதான் என்று பொய் சொல்லி இறங்குகிறாள். வீட்டில் இருந்து ஒரு பெண்மணி வெளியே வர அத்த நான் வந்துட்டேன் என்று போய் சொல்லி வீட்டுக்குள் நுழைய அந்தப் பெண்மணி யாருமா நீ என்று கேட்க நான் சொல்றேன் கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்லி சமாளித்து இன்ஸ்பெக்டர் சென்றதும் நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் அதனால் தான் உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன் மன்னிச்சிடுங்க என்று சொல்லி மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு வந்து விடுகிறாள்.

பாரிஜாதம்: போகி பண்டிகையை கொண்டாட தயாராகின்றனர். அப்போது சிந்தாமணி இசை கட்ட வைத்திருந்த புடவையை கொண்டு வந்து ஸ்ரீஜாவிடம் கொடுக்க அவள் அந்த புடவையை எரிக்க வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து மறைத்து விடுகிறாள். அடுத்து ருக்குமணி வர்ஷினியிடம் உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம் என்று சீர் கொடுத்தது பற்றி பேசி திட்ட அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்ல என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள். ,கீழே எல்லாரும் காத்திருக்க விஷால் இப்போதும் வர மாட்டான் என்று சொல்கின்றனர். ரூமில் இசை விஷாலை எழுப்ப முயற்சி செய்து தெரியாமல் பாத்திரத்தை போடுவது போல் அவன் தலையில் போட்டு எழுப்ப விஷால் கோபப்பட்டு மீண்டும் படுத்து விடுகிறாள்,


Click it and Unblock the Notifications











