twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிதி பாலன் தொகுத்து வழக்கும் "தக திமி தக ஜனு"… பரதநாட்டியக் கலைஞர்களுக்கான புது நிகழ்ச்சி !

    |

    சென்னை : ஜெயா டிவியில் பரதநாட்டிய கலைஞர்களுக்காக "தக திமி தக ஜனு'' என்ற புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

    இந்த புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான அருவி புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார்.

    26 எபிசோடுகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு எபிசோடுக்கும் 2 நடுவர்கள் இருப்பர். அவர்கள் அனைவரும் நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிகவும் பிரபலமான நடன குருக்களாக இருப்பார்கள்.

    பார்டர் படத்தோட நெஞ்சே நெஞ்சே பாடல்... 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை பார்டர் படத்தோட நெஞ்சே நெஞ்சே பாடல்... 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

    பரதநாட்டிய கலைஞர்களுக்காக

    பரதநாட்டிய கலைஞர்களுக்காக

    ஜெயா டிவி 'தக திமி தா ' பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இது 500-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது மேலும் தேசிய அளவில் சிறந்த நடன நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் 'ராபா' விருதையும் இந்த நிகழ்ச்சி வென்றுள்ளது.

    சூப்பர் ஹிட் நிகழ்ச்சி

    சூப்பர் ஹிட் நிகழ்ச்சி

    இதில், 5000-க்கும் மேற்பட்ட பரத கலைஞர்களையும், 1000 நடன குருக்களையும் உருவாக்கிய வரலாறு இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக விளங்கிய தக திமிதாவில் பானுப்ரியா, ஷோபனா, சுகன்யா, மோகினி, சுதா சந்திரன், அன்னி மாளவிகா, விமலா ராமன், இந்திரஜா, அபர்ணா மற்றும் பலர் தொகுத்து வழங்கினார்கள்.

    தக திமி தக ஜனு

    தக திமி தக ஜனு

    இந்நிலையல், 'தக திமி தா' நிகழ்ச்சி புதிய வடிவத்தில் "தக திமி தக ஜனு" ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஆரம்பச் சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் 26 எபிசோடுகள் இருக்கும். இந்த சுற்றுகளின் இறுதியில் வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவார்.

    தில்லானா சுற்று

    தில்லானா சுற்று

    இந்த முதல் சுற்று ஒரு சவாலானது மற்றும் நடனக் கலைஞரின் திறமை, திறன், தரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்ககூடியதாக இருக்கும். தில்லானா என்பது சிக்கலான தாளங்களுடன் குறுக்கிடப்பட்ட வேகமானதாக இருக்கும்.

    இசை சுற்று

    இசை சுற்று

    இந்த சுற்றில் நடனக் கலைஞர்களின் அபிநயம் அல்லது பாவனைகளை வெளிப்படுத்தும் திறனை மதிப்பீடு செய்யும். போட்டியாளர்கள் திரைப்படங்களிலிருந்து மெலோடி பாடல்களை தேர்வு செய்து நடனமாட வேண்டும். ஏற்கனவே அந்த படங்களில் நடனமாடிய பாடல்களை தேர்வு செய்யக்கூடாது. இப்படி பல சுற்றுகள் இந்த நிகழ்ச்சியில் இருக்கும். இந்த புதுமையான நிகழ்ச்சியை அருவி புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

    English summary
    Thaka Dhimi Thaka janu of Jaya tv is the greatest contribution of the channel to the classic of Bharatnatiyam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X