விஜய் டிவி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வெல்வார்களா 'ஜெயம்' சகோதரர்கள்?

விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அடிக்கடி பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெற்று வருகின்றனர். நடிகை ஸ்ருதி, நடிகர் கார்த்தி, சின்னத்திரை நட்சத்திரங்கள் போன்றோர் பங்கு பெற்றிருக்கின்றனர். அந்த வரிசையில் வியாழக்கிழமை இரவு இயக்குநர் ராஜா, அவரது சகோதரர் ஜெயம் ரவி ஆகியோர் பங்கு பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தாங்கள் வெல்லும் பரிசுத்தொகையை இசையமைப்பாளர் மகேஸ் அவர்களின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு கொடுக்கப்போவதாக தெரிவித்தனர் சகோதர்ரகள்.
மிகவும் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜாவும், ஜெயம் ரவியும் தங்கள் குழந்தை பருவ நினைவுகளை சூர்யாவுடன் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது. நிகழ்ச்சியின் இடையே நடிகர் ஜெயம் ரவி சென்னை செந்தமிழ் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறி 12 கேள்விகள் வரை பதில் கூறி 12 லட்சத்து 50 ஆயிரம் வரை பரிசுத்தொகையை பெற்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து விளையாடுவதற்கும் நேரம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அவர்கள் திங்கட்கிழமை அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யா. இதனால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் சகோதரர்கள் ஒருகோடி வெல்வார்களா என்பதைக் காண திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் ஜெயிக்கும் பணம் அறக்கட்டளைக்கு செல்லப்போகிறது என்பதால் அதிக அளவில் பணம் வெல்ல வேண்டும் என்றே நேயர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications