Thenmozhi BA Serial: இந்தா ஜீன்ஸ் பாட்டியும் வந்துட்டாக...தேன்மொழி சீரியலில்!

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் வரிசையா முத்து பட சீன்...படிக்காதவன் பட சீன் என்று உல்டா பண்ணி சீன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க...சும்மா ஃபன்னுக்குத்தான்.. அதுவும் நல்லாத்தான் இருக்குது.

இப்போ தென்மொழி அப்பத்தாவுடன் ஜீன்ஸ் பாட்டி கணக்கா வாராய் என் தோழி வயசான தோழி வாய்விட்டு சீட்டியடின்னு கிளம்பிட்டாங்க. ஐஸ் கிரீம் சாப்பிடறது என்ன, தண்ணித் தொட்டியில மிதக்கறது என்னன்னு தெறிக்க விடறாங்க.

ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி இப்படி கியூட்டியா இருந்தா எப்படி இருக்கும்.. எல்லாமே நம்ம கையிலதான் இருக்கு. உங்க வீட்டு பாட்டியையும் இப்படி மாத்தி ஜாலியா கொண்டாடுங்க.

தேனு பாட்டி

தேனு பாட்டி

முதலில் தேன்மொழியை காந்திநகர்க்காரின்னு இதே அப்பத்தாவும்தான் அவளை வெறுத்து ஒதுக்கினாங்க. அப்புறம் அவங்களுக்கு தேனு ஒரு அப்பாவிப் பொண்ணு.. ஆனா ரொம்ப நல்லவன்னு தெரிஞ்சு கொஞ்சம் ஆதரவா இருக்காங்க. ஆனா ஒரு நாள்... அந்த ஒரு நாள்.. வீட்டில் அப்பத்தா மட்டும் தனியா இருக்கும்போது அவங்களுக்கு நெஞ்சு வலி வந்துருது.

ஐயோ அம்மா

ஐயோ அம்மா

ஐயோ அம்மான்னு அலறியபடியே கீழே விழுந்துட்டாங்க. பேச்சு மூச்சு இல்லை. தேனுதான் ஓடிவந்து காப்பாத்தறா. அப்பவே அப்பத்தாவின் நெஞ்சுக்குள் தேனு குடி வந்துட்டா. ஒவ்வொரு முறையும் அப்பத்தா தேனுவுக்கு ஆதரவா பேச ஆரம்பிச்சு தேன்மொழியை இந்த வீட்டில் வாழ வைக்கணும்னு திட்டம் போட்டுட்டாங்க. ஒரு நாள் பாருங்க இந்த அப்பத்தா பண்ணின வேலையில் அருளுக்கும் கூட தேன்மொழி மீது ஒரு இது வந்துருது.

பலே அப்பத்தா

பலே அப்பத்தா

பலே அப்பத்தான்னு சபாஷ் போடற மாதிரி, அப்பத்தா தேனு ரூமுக்குள்ள அருளை தந்திரம் செய்து அனுப்பி தாழ்ப்பாளை போட்டாங்க பாருங்க. செம ஹைலைட்டு. இப்படிப் பட்ட அப்பத்தாவை தேன்மொழி எப்படி கொண்டாடுவா? அப்பத்தா நினைச்ச மாதிரி ஜாலியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணு.. உடம்பு சரியாயிரும்.. ஒரு வியாதியும் இருக்காதுன்னு சொல்றா.

வாராய் என் தோழி

வாராய் என் தோழி

ஸ்கூட்டியில் உட்கார வச்சு மெட்ராறாசை சுத்திப் பார்க்கப் போறேன்னு சொல்றா பாட்டு கணக்கா கிளம்பிட்டா. போவோமா ஊர்கோலம்னு தண்ணித் தொட்டியில் அப்பத்தா கூட முங்கி முங்கி எழுந்துக்கறா. தண்ணியை அப்பத்தா மேல தெறிக்க விடறா... தீம்பார்க் எல்லாம் போயி அட்டகாசமா ரசிச்சு அப்பத்தாவும் வாராய் என் தோழி கணக்கா என்ஜாய் பண்ணி ஐஸ்கிரீம் கூடசாப்பிடறாங்க..அடி தூள் கிளப்பும் அப்பத்தா சூப்பர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X