சன் டிவியில் ஜில்லா, விஜய் டிவியில் மான்கராத்தே, ஜீ தமிழில் மஞ்சப்பை
தீபாவளி பண்டிகைக்கு என்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்று பரபரப்பான செய்திகள் ஒளிபரப்பாகிவரும் நிலையில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சிறப்புத் திரைப்படங்கள் பற்றி இப்போதே முன்னோட்டம் போட ஆரம்பித்துவிட்டனர்.
ரசிகர்களுக்காக இல்லை என்றாலும் விளம்பரதாரர்களை அதிக அளவில் தங்களின் பக்கம் ஈர்க்க புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன தொலைக்காட்சி சேனல்கள்.

ஜில்லா டிரீட்
சன் டிவியில் விஜய், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா டிவியில்
இந்த திரைப்படம் ஏற்கனவே திருவோணம் தினத்தன்று சூர்யாடிவியில் ஒளிபரப்பாகிவிட்டது. எனினும் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்ப உள்ளனர்.

அஞ்சான்
அதேபோல விஜயதசமிக்கு என்று சொன்ன சூர்யாவின் அஞ்சான் திரைப்படமும் சன்டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

மஞ்சப்பை
விமல், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

மான்கராத்தே
சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே திரைப்படம் விஜய் டிவியில் அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளி சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்ருதிஹாசனின் ரேஸ் குர்ரம்
அல்லு அர்ஜுனுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ள ரேஸ் குர்ரம் திரைப்படம் அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளி சிறப்புத்திரைப்படமாக ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











