விஜய் டிவியில் ஜோடி... சன் டிவியில் சிமா விருது விழா

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘ஜோடி சீசன் 7' நடனப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற சிமா விருது விழா வரும் ஞாயிறு மாலை சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

நான்கு ஜோடிகள்

நான்கு ஜோடிகள்

ஜோடி சீசன் 7' போட்டியில் மொத்தம் பத்து ஜோடிகள் இடம் பெற்றிருந்தனர். பல சுற்றுகளுக்குப் பின் இறுதிப் போட்டியில் ஜெனிஃபர் - யுவராஜ், ப்ரியா - சித்தார்த், சுனிதா - லோகேஷ், ஆனந்தி - அமுதவாணன் ஆகிய நான்கு ஜோடிகள் பங்கேற்றனர்.

ராதா, ராதிகா

ராதா, ராதிகா

‘ஜோடி சீசன் 7' நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கு பெற்று வந்த நடிகை ராதா, ராதிகா மற்றும் நடன இயக்குனர் கல்யாண் இந்த இறுதிப் போட்டிக்கும் நடுவர்களாக இடம் பெற்றனர். பல திரை நட்சத்திரங்களும் இந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினர்.

நட்சத்திரங்களின் நடனம்

நட்சத்திரங்களின் நடனம்

ரோபோ சங்கர், காப்ரியல்லா, ரஃபிக், தேவி ப்ரியா, சந்தியா, சத்யா, ஷில்பா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் திவாகர், சையத் சுப்ஹான், சரத் சந்தோஷ், பார்வதி, சோனியா ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

சிமா விருது விழா

சிமா விருது விழா

சிமா விருது விழா 2014 மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விருது விழா சன்டிவியில் வரும் ஞாயிறு மாலை ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X