பிரபு தேவா கூட டான்ஸ் ஆட முடியலையே.... இது நடிகை ராதாவின் ஏக்கம்!

By Mayura Akilan

பிரபு தேவா எனக்கு பிடிச்ச டான்சர். அவர் கூட டான்ஸ் ஆட வேண்டும் என்பது என்னோட ஆசை ஆனால் அது நிறைவேறாமலேயே போய்விட்டது என்று விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக வந்த நடிகை ராதா ஆதங்கத்தோடு கூறினார்.

ஜோடி நிகழ்ச்சியில் அசத்தலாக சின்னத்திரை கலைஞர்கள் நடனமாடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கருப்பு வெள்ளை சுற்று ஒளிபரப்பானது. அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து பாடல்களுக்கு ஜோடிகள் நடனமாடினர். நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன், சரோஜா தேவி ஆகியோர் கலைஞர்களின் நடனத்திற்கு டிப்ஸ் கொடுத்தனர்.

நடுவராக ராதா...

நடுவராக ராதா...

ஏப்ரல் 13ம் தேதி சனிக்கிழமை இரவு 70களில் வெளியான படங்களின் பாடல்களில் இருந்து நடனம் ஆடி அசத்தினர். எழுபதுகளில் அறிமுகமான நடிகை ராதா இந்த நிகழ்ச்சியில் நடுவராக வந்து தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ரஜினி ஸ்டைல் சூப்பர்ல…

ரஜினி ஸ்டைல் சூப்பர்ல…

ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜாதி ராஜா படத்தில் அவருக்கு இணையாக ஸ்டைலாக நடந்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றேன் என்றார் ராதா.

கமல் டான்ஸ்க்கு ஈடாகுமா?

கமல் டான்ஸ்க்கு ஈடாகுமா?

டான்சர்கள் சொல்வதை விட ஒருபடி மேலேயே ஆடி அசத்துவார் கமல் அவரோட டான்ஸ்க்கு என்னால ஈடு கொடுத்து ஆடமுடியாது இருந்தாலும் மாஸ்டரிடம் கேட்டு எனக்கும் அதுபோல ஸ்டெப்ஸ் கேட்டு ஆடுவேன் என்று கூறி ஆடிக்காட்டினார் ராதா.

பிரபுதேவா கூட ஆட முடியலை

பிரபுதேவா கூட ஆட முடியலை

பல நடிகர்களுடன் நடனம் ஆடினாலும் யாருடனாவது நடனமாட முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி கேட்டார். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று பிரபுதேவா என்று பதில்சொன்னார் ராதா. பிரபுதேவாவின் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போது அவரின் நடனத்தைப் பார்க்கும் போது இன்னும் 10 வருஷம் கழிச்சி பிறந்திருக்கலாமோ என்று ஏக்கத்துடன் கூறினார். ( அதனாலென்ன ராதா... கார்த்திகா, துளசி யை ஆட வைத்துவிட்டால் போச்சு)

மறக்க முடியாத சில்க் ஸ்மிதா

மறக்க முடியாத சில்க் ஸ்மிதா

70 களில் தமிழ் திரை உலகை கலக்கிய நடிகை சில்க் ஸ்மிதா. அவருடன் நடித்த அனுபவத்தைக் கூறிய ராதா, அவரைப் போல ஸ்டைல், உடை, யாராலும் கொண்டு வர முடியாது என்றார். கடைசியில் சில்க் ஸ்மிதாவின் நடன அசைவுகளை ரோபோ சங்கர் ஆடி நடுவர்கள் ராதா, ரம்யா கிருஷ்ணனை கலவரப்படுத்திவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

டி டியின் கலக்கல் உடை

டி டியின் கலக்கல் உடை

70 களில் வெளியான நடனம் என்பதால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்சினி மினி ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார். அதற்கு ரோபோ சங்கர் கொடுத்த கமெண்ட்தான் கொஞ்சம் பொருத்தமற்றதாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X