விஜய் டிவியின் ‘ஜோடி சீசன் 7’ செப்.5ல் இறுதிப்போட்டி

By Mayura Akilan

விஜய் டிவியின் ‘ஜோடி சீசன் 7' நடனப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 5ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த ‘ஜோடி சீசன் 7' போட்டியில் மொத்தம் பத்து ஜோடிகள் இடம் பெற்றிருந்தனர். பல சுற்றுகளுக்குப் பின் இறுதிப் போட்டியில் பங்கு பெற மொத்தம் நான்கு ஜோடிகள் தேர்வாகியுள்ளனர்.

ஜெனிஃபர் - யுவராஜ், ப்ரியா - சித்தார்த், சுனிதா - லோகேஷ், ஆனந்தி - அமுதவாணன் ஆகியோர் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள ஜோடிகள்

நான்கு ஜோடிகளின் நடனம்

நான்கு ஜோடிகளின் நடனம்

இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் இரண்டு சுற்றுக்கள் இடம் பெறும். மேலும் இந்த மேடையில் நான்கு ஜோடிகளின் போட்டிகளின் இடையே பிரமிக்க வைக்கும் நடனங்களும் இடம்பெறும்.

திரை நட்சத்திரங்கள்

திரை நட்சத்திரங்கள்

பல திரை நட்சத்திரங்களும் இந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

ரோபோ ஷங்கர் – தேவிப்ரியா

ரோபோ ஷங்கர் – தேவிப்ரியா

இதற்கு முந்தைய ஜோடி போட்டிகளில் பங்குபெற்ற ரோபோ சங்கர், காப்ரியல்லா, ரஃபிக், தேவி ப்ரியா, சந்தியா, சத்யா, ஷில்பா மற்றும்

சூப்பர் சிங்கரின் பாடல்கள்

சூப்பர் சிங்கரின் பாடல்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் திவாகர், சையத் சுப்ஹான், சரத் சந்தோஷ், பார்வதி, சோனியா ஆகியோரின் பாடல்களும் இடம் பெற உள்ளது.

ராதா - கல்யாண்

ராதா - கல்யாண்

‘ஜோடி சீசன் 7' நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கு பெற்று வந்த நடிகை ராதா மற்றும் நடன இயக்குனர் கல்யாண் இந்த இறுதிப் போட்டிக்கும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். டிடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X