மாயாவுக்கே கப் கொடுத்துடுங்க.. கமல்ஹாசன் நடத்தும் கிரிகாலன் மேஜிக் ஷோ.. ஜோ மைக்கேல் விளாசல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் டைட்டில் வின்னரில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்றும் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவிக்கு பிடித்த நபரைத் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப் போகின்றனர் என ஜோ மைக்கேல் தற்போது ட்வீட் போட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் பலரும் பிக் பாஸ் வீட்டுக்குள் கடைசி நேரத்தில் நடக்கும் உள்குத்து குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
பல வாரங்களாக தொடர்ந்து மாயா காப்பாற்றப்பட்டு கிராண்ட் ஃபினாலே வரை கொண்டு வந்ததே கமல்ஹாசன் தான் என்றும் அவர் தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப் போவதாக அதிர்ச்சி தகவலை ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் கொஞ்சம் கூட நியாயமோ தர்மமோ இல்லை என்றும் அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

கலாய்க்கப்படும் கமல்: இதற்கு முன் எந்தவொரு சீசனிலும் தொகுப்பாளர் இந்த அளவுக்கு டேமேஜ் ஆகியிருப்பார் என்றே தெரியவில்லை. மற்ற மொழிகளில் சல்மான் கான் முதல் நாகார்ஜுனா, மோகன்லால் எல்லாமே சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு தவறான தீர்ப்பை வழங்கி விட்டார் என ஆரம்பித்த பஞ்சாயத்து மாயா மீது தனிப்பாசத்தைக் காட்டி வருகிறார் என்பது வரை தொடர்ந்து கொண்டே போகிறது.
மாயா தான் டைட்டில் வின்னரா?: இந்த சீசன் டைட்டில் அர்ச்சனாவுக்கு செல்லும் என ஒரு சிலர் சொல்லி வரும் நிலையில், கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி மாயாவை தான் டைட்டில் வின்னராக ஆக்கி கோப்பையை கொடுத்து அந்த 50 லட்சம் பணத்தையும் கொடுக்கப் போகின்றனர் என சொல்லி வருகின்றனர். மாயாவுக்கு மேஜிக் என்கிற கோட் வேர்டை போட்டு ஜோ மைக்கேல் தற்போது ஒரு ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இந்தியன் 2வில் நியாயம், நேர்மை, நீதி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடியாத நியாயம், நேர்மை, நீதியை எல்லாம் கமல்ஹாசன் இந்த ஆண்டு வெளியாக உள்ள இந்தியன் 2வில் சொல்லும் பொது பார்த்துக் கொள்ள வேண்டியது தான் இந்த வாரம் கிரிகாலன் மேஜிக் ஷோவை நடத்த கமல் ரெடியாகி விட்டார் என கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ளார்.

கமல் ரசிகர்கள் பதிலடி: உங்களுக்கு மட்டும் ஏவி போட்டு மாயா தான் டைட்டில் வின்னர்னு காட்டிட்டாங்களா? இப்பவே ஏன் நெகட்டிவிட்டியை பரப்புறீங்க டைட்டில் வின்னர் அறிவிப்பு வெளியானதும் விமர்சனத்தை வைங்க, முன்னாடியே வைக்கிறது உங்களுடைய கேரக்டரை தான் தெளிவா காட்டுது என கமல் ரசிகர்கள் ஜோ மைக்கேலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். சனம் ஷெட்டி, ஜோ மைக்கேல் உள்ளிட்ட பிக் பாஸ் விமர்சகர்கள் தொடர்ந்து இந்த சீசனில் போட்டியாளர்களை பற்றி பேசுவதை விட அதிகமாக கமல்ஹாசனை மட்டுமே ட்ரோல் செய்து வருவதாக அவரது ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். மாயாவுக்கு டைட்டில் கொடுத்தா என்ன அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுத்தா என்ன என பிக் பாஸ் பார்க்காத ரசிகர்கள் ஹாயாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











