கணவனும் மனைவியும் அப்படி ஆணவமா சிரிக்குறாங்க.. இர்பான் பண்ணது மட்டமான செயல்.. அந்தணன் விளாசல்!
சென்னை: ஈகைத் திருநாள் அன்று இர்பான் சிலருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் கொடுக்க முயன்றது நல்ல விஷயம் தான். ஆனால், கணவனும் மனைவியும் சேர்ந்துக் கொண்டு பொதுமக்களை வில்லன்கள் போல மாற்றி நக்கலடித்து ஏளனமாக சிரித்தது கொஞ்சம் கூட பொறுக்க முடியாத செயல் என பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இர்பானின் செயலை கண்டித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகைக்கு ஏகப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் நண்பர்களின் வீடுகளுக்கே சென்று பிரியாணி வழங்குவதும், தங்களால் முயன்ற பரிசு பொருட்களை வழங்கியும் வருவது வாடிக்கையான ஒன்றுதான். நாங்களும் இந்த ரம்ஜான் பண்டிகைக்கு மக்களுக்கு உதவுறோம் என பையில் வெறும் 50 ரூபாயை வைத்துக் கொடுத்து அதையும் வீடியோவாக வெளியிடும் புத்தியை என்னவென்று சொல்வது என அந்தணன் விளாசியுள்ளார்.

விஜே பார்வதி, செய்யாறு பாலு என பலர் இர்பான் செய்த செயலை கடுமையாக கண்டித்துள்ளனர். இர்பான் மன்னிப்புக் கேட்டாலும், இதற்கு மேல் இப்படியொரு தவறான செயலை அவர் செய்யாமல் இருந்தாலே போதும் என அந்தணன் வறுத்தெடுத்துவிட்டார்.
கணவன் மனைவியின் ஏளன சிரிப்பு: இல்லாதவர்களுக்கு ஈகைத் திருநாள் அன்று உதவுவது இஸ்லாமிய நண்பர்களின் கடமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதை வீடியோவாக்கி காசு பார்ப்பது மற்றும் சர்ச்சையாக்கி வியூஸ் அள்ளுவது எல்லாம் ஏற்க முடியாத பாவச் செயல் அதையும் இர்பான் ரம்ஜான் பண்டிகை அன்று செய்துவிட்டு தனது மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு அப்பாவி மக்களை பார்த்து ஏளனமாக அசிங்கமா இல்லையா? ஏன் இப்படி புடுங்குறீங்க என்றெல்லாம் மோசமாக பேசியது ரொம்பவே தவறு என கண்டித்துள்ளார்.
ரொம்ப பெரிய பாவம்: இர்பான் அதுதொடர்பாக மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவர் செய்தது ரொம்பவே பெரிய பாவம். சாதாரண உணவு ரிவ்யூவராக இருந்த இர்பான் இன்று சோஷியல் மீடியா பிரபலமாக வளர்ந்துள்ளார். பல பிரபலங்களை சந்தித்து வருகிறார். சொந்தமாக வீடு கட்டியதை எல்லாம் காட்டி மேலும், சம்பாதித்து வருகிறார். ஆனால், உதவி செய்கிறேன் என்பதை எல்லாம் வீடியோவாக காட்டி காசு பார்ப்பது ரொம்பவே பெரிய பாவம் என அந்தணன் கூறியுள்ளார்.
கேபிஒய் பாலா பண்றதுதான் உதவி: கேபிஒய் பாலா ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டே அமைதியா இருக்காரு. ஆனால், 50 ரூபாயை கொடுத்துவிட்டு இந்த இர்பான் பண்ற அலப்பறை இருக்கே அய்யய்யோ தாங்க முடியல. கேபிஒய் பாலா உதவி செய்வதற்கு எதிராகவே கடுமையான விமர்சனங்கள் இவன் பப்ளிசிட்டிக்குத்தான் பண்றான் என கிளம்பின. என்னை பார்த்து மற்றவங்களும் உதவி செய்ய வேண்டும் என்று தான் செய்கிறேன் என அவர் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், இர்பான் செய்வது முழுக்க முழுக்க பப்ளிசிட்டிக்கு மட்டும் தான் எனக் கூறியுள்ளார்.
ஏகப்பட்ட சர்ச்சைகள்: தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஏதாவது சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்கிற மனநிலையிலேயே இர்பான் செய்து வருகிறார் என்றும் கார் விபத்து, குழந்தையின் பாலினத்தை அறிவித்தல், தொப்புள் கொடி கட் செய்த வீடியோ, இப்போ ரம்ஜான் சர்ச்சை என அடுத்தடுத்து தப்பு மேல தப்பு செஞ்சிக்கிட்டே தான் இர்பான் போவது சரியல்ல என்றும் இனிமேல் எந்த தவறும் செய்யாமல் அவர் இருந்தாலே சிறப்பு என அந்தணன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











