Bigg Boss Tamil Eviction: ஜோவிகா எஸ்கேப்பாம்.. அப்போ அவுட்டாக போறது டைட்டில் வின்னர் தானா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோவிகா தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்து வந்தார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக இந்த வாரமும் ஜோவிகா காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் இன்னொரு போட்டியாளர் தான் நாளை நடக்கும் ஷூட்டிங்கில் வெளியேறுவார் என்றே தகவல்கள் கசிந்து விட்டன.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே எவிக்ஷன் தான் சுவாரஸ்யம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே சில நெட்டிசன்கள் பிக் பாஸ் ரசிகர்கள் என்கிற பெயரில் உள்ளிருக்கும் ரகசிய தகவல்களை யார் முதலில் சொல்வது என போட்டிப் போட்டு லீக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரம் யார் எவிக்ட் ஆக உள்ளார் என்பதை ஷூட்டிங் முடிவதற்கு முன்னாடியே போட்டு உடைத்து விட்டனர்.
ஜோவிகா சேஃப்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அழுது அடம்பிடித்து சீன் போட்ட ஜோவிகா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் அவருக்கு குறைவான ஆதரவையே அளித்திருந்தனர். ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஜோவிகா இந்த வாரம் எவிக்ட் ஆக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக இன்னொரு போட்டியாளர் தான் எவிக்ட் ஆகப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
விக்ரம் அவுட்: டைட்டில் வின்னர் நான் தான் என இந்த சீசனில் சுற்றிக் கொண்டு திரிந்த சரவண விக்ரம் தான் நாளை நடைபெற உள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கில் வெளியேறப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன. விக்ரமின் அத்தனை கனவிலும் இப்படி மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களே என ரசிகர்கள் வருத்தப்படுவது போல கலாய்த்து வருகின்றனர்.
காப்பாற்றப்படும் புல்லியிங் கேங்: புல்லியிங் கேங்கின் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும், அதில் இருந்த வாயில்லா பூச்சிகளை தான் வெளியே அனுப்புவதாகவும் கூறுகின்றனர். மாயா, பூர்ணிமா, ஜோவிகாவை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு பின்னணியில் சில சதி வேலைகள் நடப்பதாகவும் ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











