மாதம்பட்டி ரங்கராஜை அட்டாக் செய்த பிரபலம்.. ஜாய் கிரிசல்ட்டா ரியாக்‌ஷன் பாருங்க.. விஜய் ரெஃபரன்ஸ் வேறயா

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா பிரச்னை நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்தாலும், வழக்கு இன்னும் முழுவதுமாக முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜாய் கிரிசல்ட்டா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் மாதம்பட்டி ரங்கராஜை மறைமுகமாக அட்டாக் செய்தார் நடிகை சசிலயா. அதற்கு ஜாய் கிரிசல்ட்டா கொடுத்த ரியாக்‌ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்றும், தனது குழந்தைக்கு அவர் தான் அப்பா என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடினார். நீதிமன்றத்தில் அவருக்குச் சாதகமாக முதல் கட்ட தீர்ப்பு வந்துள்ள நிலையில் ஜாய் கிரிசல்ட்டா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இப்படி இருக்கையில் அவர் நடிகை சசிலயா ஏற்பாடு செய்த எக்ஸ்போ ஒன்றில் கலந்து கொண்டார்.

Joy Crizilda s Reaction Goes Viral After Indirect Dig at Mathampatti Rangaraj Theri Style Moment Trends

வலியோடு: அங்கு ஜாய் கிரிசல்ட்டாவை பேச அழைக்கையில், தனக்கு எதிரான வழக்கை வென்று வந்துள்ள சிங்கப் பெண் என்று கூறி அழைத்தனர். அதேபோல் சசிலயா பேசுகையில், ஜாய் கிரிசல்ட்டா பல பெண்களுக்கு முன் உதாரணம். அவர் தனக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். என்று பேசினார். அப்போது வலியோடு சிரிப்பது போல சிரித்தார் ஜாய் கிரிசலட்டா.

விஜய் ரெஃபரன்ஸ்: அதேபோல் தான் ஏற்பாடு செய்துள்ள எக்ஸ்போ எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, ஜாய் கிரிசல்ட்டாவோ, தளபதி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், 'தெறி' என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஜாய் கிரிசல்ட்டா வழக்கைப் பொறுத்தவரையில் அவரது மகனான ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று டி.என்.ஏ சோதனையில் உறுதியாகிவிட்டதால், அந்த குழந்தையின் மொத்த பராமரிப்புக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார், மேலும் நீதிமன்றமும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் அந்த குழந்தையின் மொத்த பராமரிப்புச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X