»   »  கேவலமாக பேசிய காயத்ரியுடன் போய் கை கோர்த்த பச்சோந்தி ஜூலி

கேவலமாக பேசிய காயத்ரியுடன் போய் கை கோர்த்த பச்சோந்தி ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்தங்களுக்காக பொய் சொல்லியதாக ஜூலி தெரிவித்துள்ளார். இத்தனை நாட்கள் ஜூலியை அழ வைத்த காயத்ரி தற்போது அவரை தன் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராம் நடிகைகள் ஆர்த்தி, நமீதாவுடன் சேர்ந்து அடாவடி செய்து வந்தார். முதலில் ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அடுத்ததாக நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார்.

பொய்

சொந்தங்களுக்காக பொய் சொல்வது. சொந்தங்கள் இருக்கணும் என்று தானே பொய் சொன்னேன். அதில் தப்பு இல்லையே என்று ஜூலி பொய் சொல்லியதை நியாயப்படுத்தியுள்ளார்.

கமல்

கமல்

பிக் பாஸ் வீட்டில் ஜூலி பொய் மேல் பொய் பேசி நடித்து வருவதை கமல் ஹாஸனே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். அப்படி இருந்து குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று நடிக்கிறார் ஜூலி.

சாபம்

சாபம்

உனக்கே உன் மீது வெறுப்பு வரவில்லையா, சத்தியமாக சொல்லு என்று ஓவியா கேட்க ஜூலியோ லூசு மாதிரி பாடுகிறார். காயத்ரி ரகுராமோ இது அவராக தேடிக் கொண்ட சாபம் என்கிறார்.

காயத்ரி

காயத்ரி

ஆர்த்தி, நமீதா சென்றதும் ஆதரவுக்கு ஆள் இல்லாமல் போன காயத்ரி ஜூலியை தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். ஜூலியின் அசிங்கமாக பக்கத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்றுமாறு கூறி வருகிறார்கள்.

ஜூலி

ஜூலி

ஜூலியை பார்த்தாலே தற்போது பார்வையாளர்களுக்கு பிடிப்பது இல்லை. இந்த வேஷதாரி ஜூலியை பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியே அனுப்புங்கள் ஆண்டவரே என்று பலரும் கமல் ஹாஸனுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

English summary
Chameleon Juliana has now joined hands with Gayathri who used to tease her and made her cry all the time in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil