»   »  லிட்டர் லிட்டரா நீலிக்கண்ணீர் விடும் ஜூலி: போர் அடிக்குது பிக் பாஸ்

லிட்டர் லிட்டரா நீலிக்கண்ணீர் விடும் ஜூலி: போர் அடிக்குது பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜூலி பொசுக்கு பொசுக்குன்னு அழுவது பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக கண்ணீர் விட்டுள்ளது ஜூலியானா தான். டிஆர்பிக்காக அவரை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். இதை புரிந்து கொண்ட நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.

அப்படி இருந்தும் ஜூலி அழுகையை நிறுத்தியபாடில்லை.

ஆர்த்தி

ஆர்த்தி

ஆர்த்தி ஜூலியை திட்ட உடனே அவர் கதறிக் கதறி அழ இது தான் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி நடக்கும் சம்பவம். குண்டு ஆர்த்தியை கண்டாலே நெட்டிசன்களுக்கு தற்போது பிடிப்பது இல்லை.

ஜூலி

ஜூலி

ஆர்த்தி தான் வெடுக்கு வெடுக்குன்னு பேசி திட்டுகிறாரே அப்படி இருந்தும் அக்கா, அக்கா என்று ஜூலி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அப்படி பேசினால் தானே பாஸ் டிஆர்பி ஏறும்.

நடிப்பு

நடிப்பு

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லிக் கொடுத்தது போன்று ஆர்த்தியும், ஜூலியும் சண்டை போடுவதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. நடிக்கத் தானே காசு கொடுத்திருக்கிறார்கள் பாஸ்.

விஜே

விஜே

ஜூலியின் உண்மையான முகம் என்று கூறி வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகும் ஆசையில் தான நீ பிக் பாஸுக்கு வந்த என்று ஆர்த்தி ஜூலியை கேட்க அவரோ வழக்கம் போல நீலிக் கண்ணீர் வடித்தார். அழுகாட்சியை நிப்பாட்டுங்க ஜூலி என்பதே பார்வையாளர்களின் கோரிக்கை.

English summary
Viewers want Big Boss contestant Juliana to stop crying for every silly thing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil