ஜூலிம்மா, நீ தங்கம்டா: நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களின் ரியாக்ஷன்

By Siva

Recommended Video

ஹவுஸ்மேட்ஸ் அளப்பறையை பார்த்து, ஜூலியை பாராட்டும் மக்கள்- வீடியோ

சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஜூலியை தங்கம் என்று பாராட்டியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலி பொய் சொன்னதாக பார்வையாளர்கள் தைய்யா, தக்கா என்று குதித்தார்கள். ஜூலியை போலி போலி என்று கலாய்த்தார்கள். ஜூலி பொய் சொல்லி கமலிடமே வசமாக மாட்டினார்.

இத்தனை நடந்த பிறகு 2து சீசனின் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களால் ஜூலியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இட்லி தட்டு

இட்லி தட்டு

பாலாஜி இட்லி தட்டை தனது டிக்கி பகுதியில் துடைத்துவிட்டு இட்லி ஊத்தினார். இதை ஆனந்த் வைத்தியநாதனும், சென்றாயனும் பார்த்தனர். சென்றாயன் பாலாஜியிடமே சென்று கேட்டுவிட்டார். பாலாஜியோ உனக்கு இட்லி ஊத்திய தட்டை முன்பகுதியில் துடைத்தேன் என்றார்.

சென்றாயன்

சென்றாயன்

பாலாஜி கோபப்பட்டதை பார்த்த சென்றாயன் அவர் இட்லி தட்டை பின்புறத்தில் துடைக்கவே இல்லை என்று பிளேட்டை மாற்றிவிட்டார். இதையடுத்து டேனியும், வைஷ்ணவியும் கூட சென்றாயன் மாதிரியே பிளேட்டை மாற்றி பேசத் துவங்கிவிட்டனர்.

தப்பு

தப்பு

பாலாஜி இட்லி தட்டை பின்புறத்தில் துடைத்தது உண்மை. அதை நானும், சென்றாயனும் பார்த்தோம். அவர் செய்தது தப்பு. பாலாஜியும், சென்றாயனும் பொய் சொல்கிறார்கள் என்று ஆணித்தரமாக கூறினார் ஆனந்த் வைத்தியநாதன். பின்னர் அவரும் மாற்றிப் பேசினார்.

குறும்படம்

குறும்படம்

வீடு முழுவதும் கேமராக்கள் உள்ளது பாலாஜிக்கு தெரியாதா? . வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் வந்து குறும்படம் போட்டு குட்டு வைப்பார் என்பது தெரிந்தும் பொய் சொல்கிறார் பாலாஜி. திரும்பத் திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகிவிடாது பாலாஜி.

ஏன் பொய்?

ஏன் பொய்?

பாலாஜி தட்டை துடைத்ததை பார்க்கவில்லை என்று கூறிய சென்றாயன் பின்னர் பார்த்ததாக ஆனந்த், வைஷ்ணவியிடம் கூறினார். இதை கேட்ட வைஷ்ணவியோ இப்ப தானே பார்க்கவில்லை என்று கூறினீர்கள் என கேட்டு சென்றாயனை அதிர வைத்தார். வசமாக மாட்டிக் கொண்ட பிறகும் பாலாஜிக்காக பொய் சொல்கிறார் சென்றாயன். அப்படி என்ன பயம் சென்றாயா?

திட்டு

திட்டு

கடந்த சீசனில் ஜூலி பொய் சொன்னதால் அவரை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்தியவர்கள் எல்லாம் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஜூலி எவ்வளவோ மேல் என்கிறார்கள். ஜூலியை போலி என்று விமர்சித்த நிலையில் இந்த சீசனில் வீட்டில் உள்ள அனைவருமே போலியாக உள்ளனர். வீட்டில் உள்ள பலரும் பொய் சொல்லி சிக்குவது வழக்கமாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X