ரிப்பன் வெட்ட டிவி பிரபலங்கள் வாங்கும் சம்பளம் தெரியுமா?

By Mayura Akilan

நகைக்கடையோ, துணிக்கடையோ திறப்பு விழா என்றால் கடைக்காரர்கள் ரிப்பன் வெட்ட அழைப்பது சினிமா, சின்னத்திரை பிரபலங்களைத்தான்.

சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும்,தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் வட்டம் இருப்பதால் இன்றைக்கு பெரும்பாலான திறப்பு விழாக்களுக்கு சின்னத்திரை தொகுப்பாளினிகளும், சீரியல் நடிகைகளுமே அழைக்கப்படுகின்றனர்.

சினிமா நடிகைகளுக்கு லட்சங்களில் சம்பளம் தர முடியாத பட்ஜெட் கடைக்காரர்கள் சின்னத்திரை நட்சத்திரங்களின் மார்க்கெட்டினைப் பொருத்து ஆயிரங்களில் அவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக கூறப்படுகிறது.

சன் டிவி தொகுப்பாளினிகள்

சன் டிவி தொகுப்பாளினிகள்

சன் டிவி குழுமத்தில் செய்திவாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இசை டிவி, நகைச்சுவை டிவி தொகுப்பாளர்கள் என்றால் மினிமம் ஒரு லட்சம்.

ஸ்டார் விஜய்

ஸ்டார் விஜய்

சன் குழும டிவி தொகுப்பாளினிகளுக்கு அடுத்த படியாக அதிகம் மக்களிடம் பிரபலமாக இருப்பது ஸ்டார் விஜய் டிவி தொகுப்பாளர்களுக்குத்தான். குறைந்த பட்சம் ரூ.50000 தரப்படுகிறதாம்.

மக்கள் டிவி

மக்கள் டிவி

மக்கள் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் அழகு தொகுப்பாளினி ரிப்பன் வெட்ட வாங்கும் சன்மானம் ரூ.25000 என்கின்றனர்.

வீட்டு மனை விளம்பரங்கள்

வீட்டு மனை விளம்பரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இப்போது நிகழ்ச்சி தொகுப்பு, ரிப்பன் வெட்டுவது மட்டுமல்லாது ரியல் எஸ்டேட் விளம்பரங்களும் கை கொடுக்கின்றன. இதற்கு சம்பளமாக அவர்களுக்கு வழங்கப்படுவது அவர்கள் கூவி கூவி விற்கும் வீட்டு மனைகள்தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X