சினிமாவில் எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்கு.. உண்மையை உடைத்த காஜல் பசுபதி!
சென்னை: சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை காஜல் பசுபதி. அதைத்தொடர்ந்து, கஸ்தூரி, அரசி, இனியா சீரியல்களில் நடித்துள்ள இவர். வசூல் ராஜா எம்பிபிஎஸ், டிஸ்யூம், பெருமாள், சிங்கம், கோ போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் அளித்திருக்கும் பேட்டியில் சம்பளத்தை கேட்டால், வீணாக பழி போட்டு கேரியரை வீணாக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதில், யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்காததால், ஒரு குறும் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். அந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் கதை. இது குறித்து பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி இருக்கிறேன். ஆனால், பட்ஜெட் பிரச்சனையை காரணமாக யாரும் படத்தின் தயாரிப்புக்கு முன் வரவில்லை அதற்கான நேரம் வரும்போது நிச்சயமாக அந்த படத்தை நான் இயக்குவேன். யாரிடம் கேட்டாலும் ஒகே பண்ணிடலாம்... பண்ணிடலாம் என்கிறார்கள். ஆனால், யாரும் செய்ய முன் வரவில்லை.

காஜல் பசுபதி: முதலில் நான் சன் மியூசிக்கில் மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சீரியலுக்கு வந்த பிறகு 15 ஆயிரம் ரூபாய் வாங்கினேன் படத்திற்கு 50 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது என்னை ஒரு சீரியலில் குறைவான சம்பளத்திற்கு அழைத்தார்கள். நான் அதில் நடிக்க மறுத்துவிட்டேன். இந்த சம்பளத்திற்கு நான் ஃப்ரீயாகவே நடித்துக் கொடுக்கிறேன் என்றேன். ஆனால், அதற்கு அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு சீரியலில் நான் குறைவான சம்பளத்திற்கு நடித்து விட்டால், அடுத்து நான் வேறு ஒரு சீரியலுக்கு செல்லும்போது கடைசியாக நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள் என்று கேட்டு தான் அந்த சீரியலுக்கான சம்பளத்தை முடிவு செய்வார்கள். இதனால் நான், ப்ரீயாகவே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
குடித்துவிட்டு தகராறு: அதுமட்டுமல்லாமல் பல சீரியல்கள் மற்றும் படங்களில் நான் நடித்ததற்கு எனக்கு சம்பளமே வரவில்லை. இதைப்பற்றி ஒரு பேட்டியில் கூறிவிட்டதாக பட வாய்ப்புகள் எனக்கு குறைந்துவிட்டது. அதேபோல, அண்மையில் ஒரு சீரியலில் நடித்து இருந்தேன் அந்த சீரியலில் எனக்கு சம்பளம் வராததால் அதை கேட்டேன். ஆனால், அவர்கள் படப்பிடிப்பில் நான் குடித்துவிட்டு தகராறு செய்தேன் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி என்னுடைய கேரியரை அவர்கள் வீணாக்கி விட்டார். இரண்டு மாசம் நாய் மாதிரி வேலை வாங்கிவிட்டு, சம்பளத்தை தராமல் தகராறு செய்ததாக சொல்லுகிறார்கள். தகராறு செய்ததற்கான ஆதாரம் இருக்கா என்று கேட்டால் இல்லை.

பெண்கள் உஷாரா இருக்கணும்: தொடர்ந்து பேசிய காஜல் பசுபதி, சீரியல் நடிகை ஒருவரின் ஆடிஷன் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் என்ன பைத்தியமா என்று தான் எனக்கு கேட்கத் தோன்றியது. எப்படியாவது ஜெயித்தாக வேண்டுமே என்பதற்காக சில பெண்கள் இப்படி தேவையில்லாத செயலை செய்து மாட்டிக் கொள்கிறார்கள். எந்த ஆடிஷனிலும் இதுபோன்று செய்ய மாட்டார்கள். இதனால் பெண்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியா... என்று பார்த்து அதற்காக ஆடிஷன் செல்ல வேண்டும். அதற்காக நான் எல்லாரையும் தவறானவர்கள் என்று குற்றம் சொல்லவில்லை. நல்ல படத்தை எடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டோம் என்பதற்காக பெண்கள் முடங்கி வீட்டில் இருக்கக் கூடாது. ஒரு பெண்ணை கற்பழித்த நாயே தைரியமாக சுற்றிக்கொண்டு இருக்கும்போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் வீட்டுக்குள் பூட்டி கொண்டு இருக்க வேண்டும். அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அந்த பெண் வெளியில் வரவேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். பெண்களால், ஆண்களை அடிக்க முடியும். ஆனால், சிறுவயதில் இருந்தே, நீ பெண், ஆண்களை அடிக்கக்கூடாது என்று சொல்லி சொல்லி, மனதில் தைரியமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். இதனால், பெண்கள் எல்லா இடத்திலும் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரேட்: தொடர்ந்து பேசிய நடிகை காஜல் பசுபதி, சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் இல்ல, எல்லா துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. சினிமாத்துறையில் தான் அதிகமாக தெரிகிறது. ஒரு பெண் அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்றால், அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி மூலமாக அவளுக்கு சில பிரச்சனைகள் வரும். அதேபோல ஐடி அலுவலகத்தில் கழிவறையில் காண்டம் இருந்த விஷயங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் நடந்திருக்கிறது. இப்படி ஆண்கள் இருக்கும் எல்லா இடத்திலும், இந்த பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
நான் சன்மியூசிக்கில் வேலைக்கு செல்வதற்கு முன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அட்மாஸ்பியர் காட்சியில் நடித்திருந்தேன். அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது, கவர்ச்சியான உடை அணிந்து வந்தால் அவர்களுக்கு 800 ரூபாய், சுடிதார் , புடவை என்றால் 600 ரூபாய் இருக்கும், அதற்கு கீலேவும் நார்மலாக உடை அணிந்து வருபவர்களுக்கு தனி ரேட் இருக்கிறது. நான் மாடல் கேர்ள் கேட்டரியில் சென்றேன். அதே போல எனக்கு சில்க் ஸ்மித்தாவை ரொம்ப பிடிக்கும், அவர்களை பிடிக்காது என்று சொல்வதற்கு ஒரு காரணம் கூட, இல்லை. அவர்கள் எவ்வளவு தான் கவர்ச்சியாக உடை அணிந்து வந்தாலும், அதில் ஆபாசமே இருக்காது என்று நடிகை காஜல் பசுபதி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
நடிகை காஜல் பசுபதி, டான்ஸர், நடிகர் என பன்முக திறமைக்கொண்ட சாண்டி மாஸ்டரும் முன்பு லிவ்வின் ரிலேஷனில் இருந்தனர். அதன் பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். காஜலை பிரிந்த சாண்டி, சில்வியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஜல், சாண்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டாலும், சாண்டியின் மீது இருக்கும் அன்பால் அவரது குடும்பத்துடன் நட்புறவில்தான் இருக்கிறார் காஜல். சாண்டி வீட்டில் நடக்கும் விஷேசம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வாழ்த்தி வருகிறார். மேலும், அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருவார் காஜல் பசுபதி.


Click it and Unblock the Notifications











