சாண்டியை காரித்துப்பி கிழித்து தொங்கவிட்ட மதுமிதா.. முன்னாள் மனைவி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: சாண்டியிடம் மதுமிதா கோபப்பட்டது குறித்து அவரின் முன்னாள் மனைவியான காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் சாண்டி. நடன இயக்குநரான இவர், மற்றவர்களை கிண்டல் செய்து பாட்டுப்படுவது, கேலி செய்வது என சிலரை சிரிக்க வைத்தும் சிலரை அழ வைத்தும் வருகிறார்.
மேலும் புரணி பேசுவதையும் அவ்வப்போது செய்து வருகிறார். சேரனை சாத்தான் வேதம் ஓதுகிறதா என்று கேட்டார் சாண்டி. மேலும் கவினின் காதல் விவகாரத்தில் எல்லோரும் இருக்கும் போது பொதுவாக மன்னிப்பு கேட்டுவிடு என்று சேரன் கூறியதை பெரிய விஷயமாக்கினார்.

இரு மாதிரி
ஆரம்பத்தில் இருந்தே மீரா மற்றும் மதுமிதாவுடன் ஒரு மாதிரியாகவும், மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஒரு மாதிரியாகவும் தான் நடந்து வருகிறார் சாண்டி. அடுத்தவர்களை கிண்டல் செய்வதால் சிலர் சிரிக்கலாம். அதனால் பாதிக்கப்படுபவர்களை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நடந்து கொள்கிறார் சாண்டி.

கிழித்து தொங்கவிட்டார்
இப்படிதான் மதுமிதாவையும் அவரின் உருவ அமைப்பை வைத்து கிண்டல் செய்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத மதுமிதா நேற்று எகிறிவிட்டார், சாண்டியை காரித்துப்பி கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டார்.

சாண்டி ரசிகர்கள்
இதனை பார்த்த பலரும் மதுமிதாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சாண்டி ரசிகர்கள் மதுமிதாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளனர்.
நான் நினைத்ததை பேசிவிட்டாய்
அப்படி ஒருவர் பதிவிட்ட கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல். மேலும் என் மனதில் உள்ளதை நீ பேசிவிட்டாய் என்றும் கூறியுள்ளார் காஜல்.

சாண்டி பெயரை கெடுக்க
அந்த பதிவில் இருப்பதாவது, அந்த பெண் என்ன சொல்ல வரான்னே எனக்கு புரியல, அவரின் பிஹேவிங், ரியாக்ஷன் பயன்படுத்திய வார்த்தை அனைத்தும் தவறானது. அவள் என் இனத்தை சேர்ந்தவள் என்பதற்காக என்னால் ஆதரிக்க முடியாது. மிகவும் தந்திரமானவள், வாரம் தோறும் சாண்டிக்கு நல்ல பெயர் கிடைப்பதை அறிந்து அதனை கெடுக்க திட்டமிட்டாள் அதனை நிறைவேற்றிவிட்டாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னால் பேசுவது?
இந்த பதிவை தான் காஜல் தனது டிவிட்டர் பக்கதில் ரீடிவிட் செய்து என் மனதில் உள்ளதை நீ பேசிவிட்டாய் என தெரிவித்துள்ளார். சாண்டி சேரன், மீரா, மதுமிதா குறித்து பின்னால் பேசியதும் மோகன் வைத்யா இருக்கும் வரை நைனா நைனா என்று கூறிவிட்டு, அவர் போன பிறகு பெண்களை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததும் சரியா?

ஒருதலைபட்சமாக?
தர்ஷன், முகென், சேரன் ஆகியோரும் அந்த வீட்டில் தான் உள்ளனர். ஆனால் அவர்கள் யார் முதுகுக்குப் பின்னும் இப்படி செய்யவில்லை. பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து சரியாக விமர்சனம் செய்யும் காஜல் முன்னாள் கணவர் என்பதற்காக ஒருதலை பட்சமாக பேசுகிறார் என்ற கருத்தும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











