முன்னாள் புருஷனுக்கு ஃபிரன்டுங்க்றதுக்காக இப்படியா சொம்படிப்பீங்க..நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: முன்னாள் கணவரின் நண்பர் என்பதால் கவினுக்கு சப்போர்ட் செய்துவரும் காஜலை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஜய் டிவி பிரபலமான கவின், பிக்பாஸ் வீட்டில் உள்ள நான்கு பெண்களை காதலித்து வருகிறார். கன்டென்ட் கொடுப்பதற்காக நான்கு பேரை காதலித்ததாக கூறி கமலிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் கவின்.
கவினே தனது தவறை ஒப்புக்கொண்டார். ஆனாலும் நடிகையும், சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல், கவின் செய்ததில் தவறில்லை என வக்காலத்து வாங்கியுள்ளார்.
நடிப்பது தவறா?
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஒரு பெண் இரண்டு பேரை காதலிக்கலாம் என அபியின் பெயரை குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் ஒரு ஆண் காதலிப்பது போல் நடிப்பது தவறா என கேள்வி கேட்டுள்ளார்

தவறான விவாதம்
காஜலின் விவாதமே தவறாக உள்ளது என நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். அபிராமி, கவின் தனது காதலை ஏற்காத பட்சத்தில் முகெனை காதலிக்க தொடங்கினார்.

காதல் தோல்வி
அபியின் முதல் காதல் ஒரு தலை காதல். அந்த காதல் தோல்வியடைந்துவிட்டது. இதனால் அபிராமி, முகெனை காதலிக்க தொடங்கினார். அவர் ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலிக்கவில்லை.

லாஸ்லியா காதல்
ஆனால் கவின் ஒரே நேரத்தில் நான்கு பேரிடமும் கடலை போட்டார். சாக்ஷியை காதலிக்கும்போதே லாஸ்லியாவையும் காதலித்தார் கவின்.

முன்னாள் கணவரின் நண்பர்
காஜல் நிகழ்ச்சியை பார்க்காமல் இப்படி பேசுகிறாரா இல்லை தனது முன்னாள் கணவரான சாண்டிக்கு பிக்பாஸ் வீட்டில் கவின் ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக அவர் இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை.
கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ஆனால் தனது முன்னாள் கணவரின் நண்பர் என்ற காரணத்திற்காகதான் காஜல் கவினுக்கு இப்படி கண்மூடித்தனமாக சொம்படிக்கிறார் என கழுவி ஊற்றி வருகின்றனர். உங்களுககு சாண்டி பிடிக்கும் அதனாலோ சாண்டிக்கு யார் பிடிக்குதோ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க அவ்ளோ தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ரொம்ப மோசம்
பிக்பாஸில் பங்கேற்றப்போது இருந்த காஜலை எனக்கு மிகவும் பிடித்தது. அப்போது வெளியில் இருக்கும் மக்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலை படாமல் மனதில் பட்டதை செய்தார். ஆனால் இந்த சீசனில் ரொம்ப மோசம், காஜல் உங்களிடம் இருந்து இந்த ஒரு தலைபட்சமான கருத்தை எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார் இவர்.
நீங்கள் பார்க்காதது
காஜல் 4 பெண்களுடன் ஜொள்ளு இருந்து அதை அவரே சொல்லியிருக்கிறார் நான் பார்த்திருக்கிறேன், புரிந்து கொண்டேன் சில அத்தியாயங்களில் நீங்கள் புரிந்து கொள்ளாத அல்லது பார்த்திராத ஒன்று அது இருக்கலாம் என்று கூறுகிறார் இவர்.
ஊக்கப்படுத்துகிறீர்களா?
நடிச்சானா.. அதுவும் லவ் பண்ற மாதிரி.. அப்போது இந்த மாதிரி நடவடிக்கைகளை நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்களா ஓகே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











