'செல்லம்மா' ஜெயித்த 6 லட்சம் ரூபாய் !

By Mayura Akilan

Radhika
கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஜெயித்த 6 லட்சம் ரூபாயை திரைப்படத்துறை, சின்னத்திரை நடிகர்களின் நலநிதிக்காக கொடுத்தார் செல்லம்மா ராதிகா.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியில் கடந்த வாரம் செல்லமே சீரியலில் நடிக்கும் நடிகைகள் பங்கேற்றனர்.செல்லம்மா - முத்தழகி பங்கேற்க அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலைவாணியும், சிவரஞ்சனியும் பங்கேற்றனர். நடனம், பாடல் என உற்சாகமாக களை கட்டிய இந்த நிகழ்ச்சியின் முடிவில் செல்லம்மாவும், முத்தழகியும் 6 லட்சம் ரூபாயை வென்றனர்.

பரிசாக பெற்ற ரூபாயை வீடற்ற நலிந்த கலைஞர்களுக்கு வழங்குவோம் என்று முதலியே நடிகை ராதிகா தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமாரிடம் 3 லட்சம் ரூபாயை அவர் வழங்கினார்.

மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் என்ற வகையில் சின்னத்திரை கலைஞர்களின் நலனுக்காக செலவிடப்போவதாக அவர் கூறினார்.

கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் இந்த வாரமும் சின்னத்திரை குடும்பத்தினரே பங்கேற்க உள்ளனர். திருமதி செல்வம் தொடரில் நடிக்கும் செல்வம் - அர்ச்சனா ஜோடி போட்டியில் பங்கேற்க அவரது சகோதரியும், தோழியும் அவர்களை உற்சாகப்படுத்த வருகின்றனர். அதற்கான முன்னோட்டமே கலகலப்பாக உள்ளதால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X