ஜெயா டிவியில் காலபைரவனின் கதை

By Mayura Akilan

ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் 'காலபைரவன்'.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அழகிய கிராமம் 'பைரவபுரம்' அந்த கிராமத்தில் உள்ள காலபைரவன் கோவிலை பல நூற்றாண்டுகளாக அதே கிராமத்தின் பூர்வ குடிகளான ஐந்து குடும்பங்கள் பராமரித்து வந்தன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஐந்து குடும்பத்தில் உள்ள இரண்டு குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறில் கால பைரவர் கோவிலின் அனைத்து பூஜை புனஸ்காரங்களும் தடைப்பட்டு போனது. அதில் ஒரு குடும்பம் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி பக்கத்து கிராமத்தில் குடியேறியது.

குடும்ப வாரிசுகள்

குடும்ப வாரிசுகள்

இப்போது அந்த ஐந்து குடும்பங்களின் வாரிசு என்று இருப்பவர்கள், கலியபெருமாள், கணேசன், தர்மலிங்கம், காத்தவராயன் மற்றும் ஆர்யபாஷ்யம். இதில் கணேசனும், காத்தவராயனும் இன்றும் அதே பைரவபுரத்திலேயே தங்கள் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். முன்பே பக்கத்து கிராமத்தில் குடியேறிய குடும்பத்தின் வாரிசு தான் தர்மலிங்கம். கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் தங்கள் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்கள்.

காலபைரவர் கோவில்

காலபைரவர் கோவில்

காலபைரவர் கோவிலில் மீண்டும் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் எடுத்த முயற்சியின் பலனாக ஐந்து வாரிசுகளும் ஒன்று கூடி கோவில் திருப்பணியை தொடங்க முடிவு செய்கிறார்கள்.

காணாமல் போன பைரவர்

காணாமல் போன பைரவர்

பூஜை நடத்தி கோவிலுக்குள் சென்று பார்க்கும் போது, காலபைரவர் விக்ரகம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். மீண்டும் அவர்களுக்குள் தகராறு வந்து பிரிகிறார்கள்.

பழிவாங்கும் காதலர்கள்

பழிவாங்கும் காதலர்கள்

கலியபெருமாளின் மூத்த மகள் அருந்ததி சென்னை மாநகர துணை கமிஷனர். வேகத்தோடு செயல்படும் ஒரு துணிச்சல் மிக்க அதிகாரி. விவேகானந்தன் பிரபல பத்திரிகையாளர். கல்லூரி நாட்களில் விவேகானந்தனும், அருந்ததியும் காதலர்களாக இருந்து ஈகோவினால் பிரிந்து, இப்போது சமயம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் பழிவாங்கிக் கொண்டிருப்பவர்கள்.

திடுக்கிடும் சம்பவங்கள்

திடுக்கிடும் சம்பவங்கள்

விவேகானந்தனுக்கு திடீரென ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. நடக்கப் போகும் ஒரு பெரிய விபத்தைப் பற்றி சொல்லி, முடிந்தால் அதை தடுத்துப்பார் என்று பேசுபவர் கூறுகிறார். விவேகானந்தன் அதை வதந்தி என்று எண்ணி உதாசீனப்படுத்துகிறான். ஆனால் மறுநாளே அதே போன்ற ஒரு சம்பவம் நடக்க அதிர்ச்சி அடைகிறான். தொடர்ந்து அவனுக்கு இதே போன்று அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசுபவன் கூறும்படியே சம்பவங்கள் நடக்கிறது.

இணையும் காதலர்கள்

இணையும் காதலர்கள்

விவேகானந்தன் இதுபற்றி கமிஷனர் ரஞ்சனிடம் புகார் கூறுகிறான். கமிஷனர் இதைப்பற்றி விசாரணை நடத்தும் பொறுப்பை துணை கமிஷனர் அருந்ததியிடம் ஒப்படைக்கிறார்.

விவேகானந்தனும், அருந்ததியும் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தார்களா? மீண்டும் இருவரும் காதலர்களாக மாறி வாழ்க்கையில் இணைந்தார்களா? தடைபட்ட காலபைரவர் கோவில் திருப்பணி மீண்டும் தொடங்கியதா?அடுத்து வரும் விறுவிறு திருப்பங்களில் விடை கிடைக்கும்.

நடிகை சங்கவி

நடிகை சங்கவி

நடிகை சங்கவி இந்த தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்துள்ளார். ராகவன், ரூபஸ்ரீ, கமலக்கண்ணன், தியாகராஜன் ஏனைய நட்சத்திரங்கள். காலபைரவன் தொடரில் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம்: ராஜீவ் பிரியன். ஜேஸ்மின் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: கே.ஏ.கே.ஆசாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X