வாழ விருப்பம் இல்லை... மன அழுத்தம்.. கௌரி சீரியல் நடிகை எழுதிய கடிதம் சிக்கியது!
சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியல் நடிகை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நந்தினியின் தற்கொலைக்கு என்ன காரணம் என அனைவரும் கேட்டுவந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னட சீரியல் நடிகையான நந்தினி, ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு, நீனாதே நா என பல சீரியல்களில் நடித்துள்ளார். திறமையான நடிகையான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடரில், கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடத்தில் நடித்தார். அந்தத் தொடரில் அவரது நடிப்பு பார்வையாளர்களிடையே அவருக்கு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

நடிகை நந்தினி: இந்நிலையில், நடிகை நந்தினி, பெங்களுரில் தங்கும் விடுதியில் தங்கி இருந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த விடுதியின் உதவியாளர் அறையின் கதவை திறந்து பார்த்த போது அவர் தூக்கில் தொடங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அறையை போலீசார் சோதனை செய்த போது, தற்கொலை செய்வதற்கு முன், நந்தினி எழுதி கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
மரணத்திற்கு காரணம் இதுதான்: அந்த கடிதத்தில், தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், தனது பெற்றோரைப் பார்த்து, திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று சொல்ல முடியவில்லை, அந்த விஷயத்தால் தான் மன தளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து, கெங்கேரி காவல் நிலையத்தில், 2023 ஆம் ஆண்டு BNSS சட்டத்தின் பிரிவு 194இன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணையில், நடிகை நந்தினி டிசம்பர் 28ந் தேதி இரவு 11.16 மணி முதல் டிசம்பர் 29ந் தேதி அதிகாலை 12.30 மணிக்குள் உயிரிழந்திருக்கலாம். நந்தினி தற்கொலை செய்து கொண்ட தகவல் காவல் நிலையத்திற்கு காலை 9.15 மணியளவில் வந்ததை அடுத்து உடனடியாக விடுதிக்கு சென்று உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று கெங்கேரி காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











