»   »  கலைஞர் டிவியில் கருணாநிதியின் தென்பாண்டிச் சிங்கம்

கலைஞர் டிவியில் கருணாநிதியின் தென்பாண்டிச் சிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் என்ற சரித்திர நாவல் கலைஞர் டிவியில் சீரியலாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான ரோமாபுரி பாண்டியன் சரித்திர நாவல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. 2014ல் துவங்கப்பட்ட சீரியல். இந்த வருடம் 2016 ஏப்ரலில் முடிவுக்கு வந்தது.

ஜெய்ப்பூர், தமிழகம் என பல லொகேஷன்கள், பிரம்மாண்ட மேக்கப் என குட்டி பத்மினி தயாரித்த இந்தச் சீரியலை தனுஷ் இயக்கினார். மீண்டும் அடுத்த சரித்திர நாவலை சீரியலாக எடுக்க உள்ளனர். அது கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் கை வண்ணம்

கருணாநிதியின் கை வண்ணம்

கருணாநிதி அரசியல் தலைவராக இருப்பதோடு மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். ராஜகுமாரி தொடங்கி மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி, மனோகரா என பல திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

கருணாநிதியின் கதை, வசனம் காலத்தால் அழியாமல் இருக்கிறது. கலைஞர் டிவியில் இவர் எழுதிய நாவல்கள் சீரியல்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. பல சீரியல்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.

ரோமபுரி பாண்டியன்

ரோமபுரி பாண்டியன்

கருணாநிதியின் கை வண்ணத்தில் உருவான சரித்திர நாவல் ரோமாபுரி பாண்டியன் சீரியலாக எடுக்கப்பட்ட போது அதற்கு வசனம் எழுதினார். 543 எபிசோடுகள் ரோமாபுரி பாண்டியன் ஒளிபரப்பானது.

வெற்றிக்கு பரிசு

வெற்றிக்கு பரிசு

மொத்தம் 543 எபிசோட்கள் ஒளிபரப்பான ரோமாபுரி பாண்டியன் சீரியல் முடிவுற்றதையடுத்து அதில் பணியாற்றிய அனைவருக்கும் கருணாநிதி நினைவுப்பரிசு கொடுத்து சிறப்பித்தார் கருணாநிதி.

ராமானுஜர் சீரியல்

ராமானுஜர் சீரியல்

ராமானுஜர் சீரியலின் ஒவ்வொரு எபிசோடுக்கான ஸ்கிரிப்டையும் விடாமல் படிக்கும் கருணாநிதி, தனக்கு தெரிந்த தான் படித்த சம்பவங்களையும் இணைத்து எழுதி செம்மைபடுத்துவதோடு வசனத்திலும் புதுமையை புகுத்தி வருகிறாராம்.

தெலுங்கில் டப்பிங்

தெலுங்கில் டப்பிங்

ராமானுஜர் சீரியல் திருப்பதி தேவஸ்தான டிவியில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. இதற்கான உரிமையை இலவசமாக அளித்துள்ளார் கருணாநிதி.

தென்பாண்டிச் சிங்கம்

தென்பாண்டிச் சிங்கம்

ரோமாபுரி பாண்டியன் நிறைவடைந்ததை அடுத்து தென்பாண்டிச் சிங்கம் நாவல் அடுத்த சீரியலுக்காக தயாராகி வருகிறதாம். விரைவில் கலைஞர் டிவியில் தென்பாண்டிச் சிங்கம் முன்னோட்டம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. 93 வயதிலும் ஒய்வறியா சூரியனாய் சீரியலுக்கு வசனம் எழுதும் கருணாநிதியை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சீரியல் இயக்குநர்கள்.

English summary
Kalaignar TV will telecast historical noval Thenpandi singam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil