களங்கள்தான் 'கும்கியில்' கதாநாயகர்கள்…. பிரபு சாலமன்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமாகியுள்ள படம் கும்கி. இதனை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் தன்னுடைய இரண்டு வருடகால உழைப்பு என்று பிரபு சாலமன் குறிப்பிட்டார்.

நாளைய இயக்குநரில் இன்றைய இயக்குநர்கள்….
கலைஞர் டிவியில் நாளைய இயக்குநர்கள் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய பிரபல இயக்குநர்கள் பிரபு சாலமன், சுரேஸ்கிருஷ்ணா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். போட்டியாளர்களின் குறும்படங்களை பார்த்து அதில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி வருங்கால இயக்குநர்களை செதுக்குவது இவர்களின் பணி.

கும்கி பற்றி பிரபு சாலமன்
நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஜெனிபர் பிரபு சாலமனின் கும்கி படம் பற்றி கேட்டதற்கு, இந்தப் படம் தன்னுடைய இரு வருட உழைப்பு என்று கூறினார். ஒவ்வொரு விசயத்திற்கும் காத்திருந்து படம் பிடிப்பதாகவும் அவர் கூறினார்.

களங்கள்தான் கதாநாயகர்கள்
ஜோக் பால்ஸ்சில் தண்ணீர் வரும் சீசனுக்காக 7 மாதங்கள் காத்திருந்ததாக குறிப்பிட்ட அவர், உழுவது, விதைப்பது தொடங்கி அறுவடை வரை ஒவ்வொரு விசயத்திற்கும் காத்திருந்து படம் பிடித்ததாக கூறினார்.

களங்கள்தான் கதாநாயர்கள்…
கதாநாயகன், கதாநாயகி என கும்கியில் இருந்தாலும் இந்த படத்தில் களங்கள்தான் முக்கிய கதாநாயகர்கள் என்று படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து விட்டார் பிரபு சாலமன்.

கும்கியை எதிர்பார்த்திட்டு இருக்கேன்…
சுரேஸ்கிருஷ்ணாவிடம் அடுத்த புராஜெட்க் பற்றி தொகுப்பாளினி கேட்டதற்கு, நான், கும்கி ரிலீஸ் ஆகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறி சிரித்தார் அவர்.

நம்பிக்கை தந்த நடுவர்கள்
இதனையடுத்து போட்டியாளர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்த நடுவர்கள், வருங்கால இயக்குநர்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி அவர்களின் முகங்களை மலரச் செய்தனர்.


Click it and Unblock the Notifications











