»   »  ‘தல’க்காக மோதும் கலைஞர், ஜெயா…

‘தல’க்காக மோதும் கலைஞர், ஜெயா…

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி, ஞாயிறுகளில் டிவி சேனல்களில் என்ன சினிமா போடுவார்கள் என்பது சிலருக்கு எதிர்பார்ப்பாகவே இருக்கும். ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு அஜீத், விஜய், சூர்யா திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். சனிக்கிழமையன்று சினிமா ஒளிபரப்புவதை சன்டிவி நிறுத்திவிட்டது. எல்லாம் இல்லத்தரசிகளின் சீரியல் மோகம்தான்.

கடந்த வாரம் விஜய் நடித்த கில்லி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதையும் விடாமல் பார்த்து டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கினார்கள் இளையதளபதி ரசிகர்கள். விடுவார்களா மற்ற சேனல்காரர்கள். இந்தவாரம் இந்த வாரம் கலைஞர் டிவியிலும், ஜெயாடிவியிலும் சனிக்கிழமை அஜீத் படம் ஒளிபரப்பாக உள்ளது,

கலைஞரில் கிரீடம்

கலைஞரில் கிரீடம்

அஜீத், திரிஷா நடித்த கிரீடம் திரைப்படம் இந்த வாரம் சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தல ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

ஜெயாவில் ஜி

ஜெயாவில் ஜி

ஜெயா டிவியில் சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு அஜீத் திரிஷா நடித்த ‘ஜீ' ஒளிபரப்பாக உள்ளது லிங்குசாமி இயக்கிய திரைப்படம் அஜீத் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

வசீகரா

வசீகரா

ஜெயாடிவியில் காலை 10 மணிக்கு விஜய், சிநேகா நடித்த வசீகரா ஒளிபரப்பாக உள்ளது. இளையதளபதி ரசிகர்களுக்கு இது ட்ரீட் ஆக இருக்கும்.

கொடி பறக்குது

கொடி பறக்குது

ரஜினி அமலா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய கொடி பறக்குது திரைப்படம் ஜெயா டிவியில் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

சன்டிவியில் இசை

சன்டிவியில் இசை

ஜூலை 12 ஞாயிறு மாலை சன் டிவியில் இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ‘இசை' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. எஸ்.ஜே.சூர்யா, சாவித்ரி, சத்யராஜ் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவரும் என்று தெரியவில்லை.

டுவிட்டரில் சண்டை

டுவிட்டரில் சண்டை

சும்மாவே தல, தளபதி ரசிகருங்க டுவிட்டரில் சண்டை போடுவாங்க. இந்த வாரம் டிவியில படம் பார்த்துட்டு கொஞ்சம் கூடுதலா சண்டை போடுவாங்களோ? பார்க்கலாம்.

English summary
Jaya TV and Kalaingar TV are clash Thala Ajith for Saturday movies.
Please Wait while comments are loading...