'அந்த' முகேஷையும் விட்டுவைக்காத விஜய் டிவி.. என்ன காரியம் பண்ணியிருக்காங்க பாருங்க!
சென்னை: புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என எச்சரிக்கும் முகேஷையும் கிண்டலடித்து கேலி செய்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பாலும் மற்றவர்களை கேலி செய்வது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர்களான மாகாபாவும் பிரியங்காவும் போட்டியாளர்களை உருவ கேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது.

அவர்களின் உருவ கேலியை நடிகை ஸ்ரீபிரியா கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில், புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என விளக்கும் விளம்பரத்தில் நடிக்கும் முகேஷை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் ஹார்ட் படத்தை நெஞ்சில் வைத்தப்படி, வந்த நபரை, விவேக் போன்று நடிப்பவர், அடப்பாவி முகேஷ், நீயாடா, இவ்வளவு நாள் தியேட்டர் தியேட்டரா சுத்திட்டு இருந்த, இப்போ டிவிக்கும் வந்துட்டியா என கேட்டு கிண்டலடிக்கிறார்.
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது தொடர்பான விளம்பர படத்தில் நடித்திருக்கும் கதாப்பாத்திரம்தான் முகேஷ். இந்நிலையில் அந்த கதாப்பாத்திரத்தை கிண்டலடிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











