கள்ளக்குறிச்சி தான் ஜான் வெல்ல காரணமா?.. சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர்.. வெடித்த சர்ச்சை!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கள்ளக்குறிச்சி பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அங்கே இருந்து வந்த ஜான் ஜெரோமுக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 10 டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை சோஷியல் மீடியாவில் கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் ஓட்டு போடுவதை வைத்து வெற்றியாளர்களை கணித்து வரும் நிலையில், ஏகப்பட்ட பிஆர் வேலைகளும் அதிகம் நடைபெற்று வருகின்றன.

Kallakkurichi Super Singer 10 VIjay Tv Tv Title Winner Music 10

இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஹாட் டாபிக்காக உள்ள நிலையில், டாப் 5 போட்டியாளர்களில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோமுக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டிலை தூக்கி கொடுத்து விட்டனர் என்கிற சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

டைட்டில் வின்னர்: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 10ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேரடியாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சின்ன கேப் தாமதத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த சீசன் டைட்டில் வின்னராக பாடகர் ஜான் ஜெரோம் முதல் பரிசான 60 லட்சம் ரூபாய் வீட்டை வென்றார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை குடித்து 55க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இந்த சம்பவம் மாறியுள்ளது. நடிகர்கள் விஜய், சூர்யா, கமல்ஹாசன், இயக்குநர் பா. ரஞ்சித், ஜி.வி. பிரகாஷ் என பல பிரபலங்கள் அந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

kallakkurichi super singer 10 vijay tv tv title winner music 10

அழுத்திச் சொன்ன பிரியங்கா: கள்ளக்குறிச்சியில் இருந்து வந்து சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னராக மாறிவிட்டாய் என்ன பேசப்போற என கள்ளக்குறிச்சி என்பதை பிரியங்கா தேஷ்பாண்டே அழுத்திச் சொன்ன நிலையில், அதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அதற்காகத்தான் இவருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டதா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 2வது இடத்தை ஜீவிதாவும் 3வது இடத்தை வைஷ்ணவியும் பிடித்துள்ள நிலையில், ஜீவிதாவுக்கு டைட்டில் கொடுத்திருக்கலாம் என்றும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தகுதியானவர் தான்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்காக ஒரு கூட்டம் அலைந்து வரும் நிலையில், அங்கேயும் ஜான் ஜெரோம் போன்ற திறமையானவர்கள் உள்ளனர் என்பதை காட்டும் விதமாக அமைந்திருந்தாலும், ஜான் டைட்டிலை வெல்ல தகுதியானவர் தான் என அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X