twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kalyana Veedu Serial: நான் கூப்பிட்டா அண்ணன் கண்டிப்பா வரும்... எதுக்கு கத்தறே?

    இந்தியன் 2 படத்தின் ஷாட்டிங்கின் போது நடைபெற்ற விபத்துக்கு நடிகை பூஜை குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: நான் கூப்பிட்டா அண்ணன் கண்டிப்பா வீட்டுக்கு பால் காய்ச்ச வரும்... அண்ணன் வரட்டும்... நீ எதுக்கு இப்படி கத்தறேன்னு கேட்கும் அளவுக்கு அனுசூயா குரல் ஹை பிட்சுல ஒலிக்குது. பதிலுக்கு அவங்கம்மா சிவகாமி அம்மா, உன் நொண்ணன் வருவாண்டின்னு காட்டுக்கத்தா கத்தறாங்க.

    எமோஷனை குறைங்க.. எமோஷனைக் குறைங்கன்னு ஆயிரத்தெட்டு தடவை சொல்லியாச்சு. ஒன்னும் கண்டுக்கிட்ட பாடு இல்லைங்க. அவங்க கத்த, பார்க்கறவங்க முகத்தை சுளிச்சுகிட்டுப் பார்க்க... வீட்டில் டென்ஷனோ டென்சன்.

    சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் எப்போது பார்த்தாலும் சீரியஸாவே காட்சிகள் இருக்குது. எல்லாரையும் ஹைபிட்சுல கத்த விட்டுட்டு, கோபி மட்டும் ஹஸ்கி வாய்ஸுலேயே பேசுவார். இதென்ன நியாயம்?

    கற்பனையும் கதையும்

    கற்பனையும் கதையும்

    நிஜ கதாபாத்திரங்களின் கதை மற்றும் அதனுடன் கற்பனை சேர்த்துதான் தான் சீரியல் எடுப்பதாக கல்யாண வீடு இயக்குநர் திருமுருகன் சொல்லி இருக்கார். அதுக்குன்னு இப்படியா? எப்போ பார்த்தாலும் பர பர விறு விறு காட்சிகள் என்று, புறணி பேசும் பெண்கள், வயதுக்கு மீறி தொண்டை அடைக்க பேசும் பெண்கள் என்று காண்பித்து, இப்படிப்பட்ட பெண்களை சமுதாயத்தில் தேடும் அளவுக்கு காண்பிச்சு இருக்கார்.

    ஒரு வயதுக்கு பிறகு

    ஒரு வயதுக்கு பிறகு

    வாழ்க்கையில் ஒரு வயதுக்குப் பிறகு குரலை உசத்தி பேசுவது என்பதே முடியாது. பொறுமை நிதானம் என்று மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதுதான் வயதின் மாற்றத்துக்கும் அழகு. கல்யாண வீட்டில் பார்த்தால், சிவகாமி அம்மா எப்போதும் தொண்டையடைக்கப் பேசி நடிச்சு இருக்கார். நிஜமாவே அவருக்கு நடிக்கும்போதும் டப்பிங் கொடுக்கும் போதும் பிபி வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

    பொண்ணுமா இப்படி

    பொண்ணுமா இப்படி

    சரி.. அம்மா கதாபாத்திரம் சிவகாமிதான் அப்படி கத்தறாங்கன்னா... பொண்ணு கதாபாத்திரமான அனுசூயாவும் கத்தறாங்க. சானலை திருப்பினாள் கீச்சு கீச்சுன்னு...ஒரே காச் மூச் சத்தம்தான் வருது. சின்ன வயசு பொண்ணுங்களையாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா குரலை உசத்தி பேசாத மாதிரி நடிக்க வைங்கப்பா... உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

    கோபி சார் ஓரவஞ்சனை

    கோபி சார் ஓரவஞ்சனை

    சின்னத்திரை சீரியல்களில் பெண்களை உசத்திதான் கதை இருக்கும். அதே கதையில் வில்லியும் இருப்பாங்க. அதென்ன கோபி சார் உங்க கல்யாண வீடு சீரியலில் மட்டும் பெண்கள் புறணி பேசி, குடும்பத்தை கெடுக்கறாங்க. தொன்டை அடைக்க எமோஷனா பேசறாங்க,. ஆண்கள் வந்துட்டு போறாங்க என்பது போல அமைதி கதாபாத்திரம்தான். அதிலும் உங்க கேரக்டர் செம!

    English summary
    Reduce Emotion Never seen anything like it. Look at them, look at the face ...Sun TV's wedding home is always on the scene. . shouted at everyone. gopi only spoke in husky voice. What is the justification for this?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X