Kalyana veedu serial: கோபி வந்ததும் கல்யாண வீடு களைக்கட்ட ஆரம்பிச்சுருச்சே!

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கதை மீண்டும் பரபரப்பா நகர்ந்தாலும், இன்னும் கோபியின் தங்கை சவீதா கல்யாணம் நடக்கலை. கல்யாண தேதி என்னவோ இன்னும் வரவில்லைதான்.

நாளை மறுநாள் நாளை மறுநாள்னே கல்யாண தேதியை சொல்லிகிட்டே இருக்காங்களே தவிர அந்த நாளை மறுநாள் வரத்தான் இன்னும் பல நாட்களாகுது. காட்சிக்கு காட்சி பிரச்சனை மேல பிரச்சனை.

இயக்குநர் திருமுருகன் மெட்டி ஒலி சீரியல் இயக்கும் போதே, சீரியலில் மூன்றாவது தங்கையாக நடித்த லீலா முழுகாம இருக்கும். சீரியலில் பிள்ளை பிறக்க என்று நிஜத்தில் இவங்க எடுத்துக்கிட்ட மாதங்கள் பன்னிரண்டுங்க.

லேட்டஸ்டாக காட்சிகள்

லேட்டஸ்டாக காட்சிகள்

கதைக்கான காட்சிகள் லேட்டாக நகர்ந்தாலும், லேட்டஸ்ட்டாக பரபரப்பை உண்டாக்கி காட்சியை விறு விறுன்னு எடுக்கறதில், திருமுருகன் வல்லவர்தான்.இவர் நடிக்காத இவரோட சீரியல் நிஜமா ரேட்டிங் வர,மாட்டேங்குது என்பதுதான் உண்மை. குல தெய்வம் சீரியல் இப்படித்தான் ரேட்டிங் வரலேன்னு ரொம்ப சீக்கிரத்தில் திருமுருகனிடம் சொல்லப்பட்டது. உடனே அதிரடியாக அடுத்த கதைக் களத்தை தயார் செய்ய ஆரம்பித்து விட்டார்.சேனல் நிர்வாகத்துக்கு நம்பிக்கையை கொடுத்து வேலைகளைத் துவக்கினார் திருமுருகன்.

கல்யாண வீடு

கல்யாண வீடு

குல தெய்வம் சீரியல் ஒரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ரகசியமாக டெல்லியில் கல்யாண வீடு சீரியல் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டார் திருமுருகன். குல தெய்வம் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தவர்களுக்கே கூட, நம்ம நடிக்கற இந்த சீரியல்தான் விரைவில் முடியப் போகுதுன்னு தெரியாமலே இருந்திருக்காங்க..வேற நேரத்துக்கு திருமுருகன் சார், கல்யாண வீடு சீரியல் இயக்கறார் போலன்னுதான் பேசிக்கிட்டாங்க. ஏன்னா சீக்கிரம் சீரியலை முடிப்பவரல்ல திருமுருகன்.அந்த அளவுக்கு மெட்டி ஒலி சீரியலை நீட்டித்து ஒரு வழியாக முடித்தார்.

ரெண்டாவது ஹிட்

ரெண்டாவது ஹிட்

நாதஸ்வரம் சீரியல் இவரின் இரண்டாவது ஹிட் . இதில் சொக்கலிங்கமாக நடித்த இயக்குநர் மவுலி சார் பெரிய ஸ்டார் காஸ்ட் என்றாலும், திருமுருகன் இடையில் இரண்டு படங்கள் இயக்கிவிட்டு, மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். நடிக்கவும் செய்தார். இதனால், இந்த சீரியலும் ஹிட்டானது என்றாலும், ரொம்ப ரொம்ப அடிப்படையான குடும்ப கதை. இதனால், ரொம்ப பரபரப்பான காட்சிகள் என்று எதுவும் இல்லை என்றாலும், சீரியல் சூப்பர் ஹிட்.

குறுந்தொடரில் குல தெய்வம்

குறுந்தொடரில் குல தெய்வம்

குல தெய்வம் சீரியல் குறுந்தொடராக முடியும்படி பிளான் போடவில்லை என்றாலும், முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, அடுத்து, தானே நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டார் திருமுருகன். இப்போது இன்னும் மும்முரமாக கதைக்களம் தயாராகி, தானும் ராசி கதாபாத்திர பெயரான கோபி கிருஷணன் பெயரில் நடிக்க ஆரம்பித்து, கல்யாண வீடு சீரியல் ஷூட்டிங் டெல்லியில் ஆரம்பித்துவிட்டு, இரண்டே மாதங்களில் டெல்லி கதைக்களத்தை முடித்தும் விட்டு, திருவையாறுக்கு வந்த போதுதான் குல தெய்வம் சீரியலை முடித்தார்.

இப்படி சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர் திருமுருகன். இந்த சீரியல் நீண்ட நெடுங்கதை. அவ்வளவு சீக்கிரம் முடியாது என்று ஆணித்தரமாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X