Kalyana veedu Serial: அப்படி போடு.. சூர்யாவுக்கு பதில் மணமகளாக ரோஜா!

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ராஜா பல தகிடுதத்தங்களை செய்து,போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி, சூர்யாவை கடத்தி வந்துடறான். குருஜியை கட்டிப்போட்டு அவரிடம் இருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தையும் செலவுக்கு கொள்ளை அடிச்சுக்கறான்.

ரோஜாவுக்கு உதவியாக இருந்த செல்வமே இப்போது ராஜாவுக்கு உதவியாக வந்து சேர, சூர்யாவை கடத்தி செல்வதைப் பார்த்த கோபி வீட்டு சம்பந்தி, மாப்பிள்ளையையும் கடத்திடறான்.

அடுத்து, கோபியின் தங்கைகளை விட்டு வைக்க கூடாதுன்னு செல்வம் யோசனை சொல்ல அவர்களையும் கடத்திடறாங்க. இப்போ ராஜா மகாபலிபுரத்தில் காட்டு கோயில் ஒன்றில் சூரியாவை கல்யாணம் செய்துக்க போறான்.

 ரோஜா ஸ்வேதா

ரோஜா ஸ்வேதா

ராஜா, அக்கா சூர்யாவை கல்யாணம் செய்துக்க கடத்தி இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்ட தங்கை ரோஜாவும் ராஜாவை பின் தொடர்ந்து போறா. கூடவே ஸ்வேதாவையும் அழைச்சுக்கிட்டு போறா. செல்வம் மகாபாலிபுரத்துக்குத்தான் அழைச்சுக்கிட்டு போவான்னு ரோஜா கெஸ் பண்ணின மாதிரி, மகாபலிபுரம்தான் அழைச்சுக்கிட்டு போறான். அங்கு ரிசார்ட்டில் சூர்யா உட்பட எல்லாரையும் தங்க வச்சுட்டு கல்யாண ஏற்பாடுகளை பார்க்கிறான்.

 ஆட்களை நம்பாமல்

ஆட்களை நம்பாமல்

ராஜாவிடம் பணம் பணம் என்று பிடுங்கிய செல்வம் ஆட்களை மகாபலிபுரம் காட்டு கோயிலில் தனது கல்யாணம் முடிஞ்ச உடனே, போட்டுத் தள்ளிடுங்கன்னு இன்னொரு கூலிப்படை செட் செய்யறான் ராஜா. கோயிலுக்கு போய் புடவை, நகைகள்,மாலை என்று வாங்கி வருவதை ரோஜாவும், ஸ்வேதாவும் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்கிறார்கள்.

 புடவை மத்தவங்களுக்கு

புடவை மத்தவங்களுக்கு

சூர்யாவுக்கு மட்டும் ஸ்பெஷல் பட்டுப் புடவை, கடத்தி வந்த கோபியின் தங்கைகள் கோபி வீட்டு சம்பந்தி என்று மற்ற நான்கு பெண்களுக்கு யூனிஃபார்ம் மாதிரி ஊதா கலர் பட்டுப்புடவை என்று வாங்கித் தருகிறான் ராஜா. அவர்களை தயாராக சொல்லி,காட்டு கோயிலுக்கு செல்வம் அண்ட் கோவுடன் போறான் ராஜா.

 பயத்தில் சூர்யா

பயத்தில் சூர்யா

நடக்கறதை எல்லாம் பார்த்தால், இந்த கல்யாணம் நடந்துருமோன்னு பயமா இருக்கு அனுசூயான்னு சூர்யா அழறா. பயப்படாத சூர்யா...கடைசி நேரத்தில் கூட ஏதாவது அதிசயம் நடக்கும்னு சொல்றா அனுசுயா. ராஜாவின் சூட்கேஸில் இருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை செல்வம் திருடிவிட, ராஜா ஒண்ணும் தெரியாதவன் போல , செல்வம் நீயும் உன் ஆட்களும் கொஞ்சம் தனியா வாங்க பேசணும்னு கோயிலுக்கு பின்னாடி அழைச்சுட்டு போறான்.

 குடுத்த துரோகம்டா

குடுத்த துரோகம்டா

ராஜா பேச ஆரம்பிப்பதற்குள் செல்வம், நீ செல்லாக் காசாயிட்டடா... உன் காசு பதிமூணு லட்சம் இப்போ என்கிட்டடா...உன்னை தூக்கி வீசிப்போட்டுட்டு, சூர்யாவை அழைகிசுகிட்டு கிளம்ப போறோம்னு சொல்ல ஆன்னு கத்தறான் ராஜா. உடனடியா ராஜா ஆட்கள் வந்து செல்வத்தின் ஆட்கள் கழுத்தில் கத்தியை வச்சு மிரட்ட, எப்படி இந்த நம்பிக்கை துரோகம் முதலாளின்னு மறுபடி செல்வம் கேட்கறான். எல்லாம் ரோஜா கத்து குடுத்ததுதாண்டான்னு சொல்லி, செல்வம் பணத்தை குடுத்துட்டு,என் ஆட்கள் உன்னை மேல அனுப்பி வைப்பாங்கப் போன்னு சொல்லிட்டு கோயிலுக்கு சூர்யாவை கல்யாணம் செய்துக்க வர்றான்.

 சூர்யாவுக்கு பதில் ரோஜா

சூர்யாவுக்கு பதில் ரோஜா

சுத்தி கோபியின் தங்கச்சிங்க மூணு பேர், கோபி வீட்டு இவர்கள் மட்டுமே சூழ்ந்திருக்க சூர்யா எங்கேன்னு கேட்கறான். அவங்க தயாராகிட்டு இருக்காங்க. வருவாங்க...நீங்க உட்காருங்கோன்னு ஐயர் சொல்ல, ராஜா மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு ரொம்ப சந்தோஷமா உட்காருகிறான். மெதுவா கண்களை நிமிர்த்தி பார்க்க, தான் வாங்கிக் குடுத்த புடவையில் நடந்து வரும் கால்களை மட்டும் பார்த்து வெட்கப்பட்டு குனிஞ்சுக்கறான்.

அருகில் வந்து பெண் அமர்ந்ததும் மெதுவாக திரும்பிப் பார்க்க அய்யோடா பக்கத்தில் மணமகளாக ரோஜா சிரித்தபடி உட்கார்ந்து இருக்கா. ராஜா முகத்தில் பேய் அறைந்தது போல மிரட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X