Senior Chutties Programme: கூட்டு குடும்பத்தில் ரொமான்ஸ்... கல்யாண வீடு சீரியல் பெண்கள் கலகல!
சென்னை: சன் டிவியின் கலகலப்பான ஒரு நிகழ்ச்சி சீனியர் சுட்டீஸ். இந்த நிகழ்சசியை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்குகிறார்.
அண்ணாச்சி முதலில் குட்டிசுட்டீஸ்னு குழந்தைகளை வச்சு கலகலப்பா நிகழ்ச்சி நடத்தி வந்தார். நடுவில் இதுக்கு கொஞ்சம் பிரேக் விட்டு இப்போது சீனியர் சுட்டீஸ்னு ஒரு நிகழ்சசியை தொகுத்து வழங்கறார்.
இந்த நிகழ்ச்சியில் சன் டிவி சீரியல்களில் நடிக்குல் இளம் நடிகைகள் கலந்து கொண்டு, சுவையாக பேசி, சிரிக்க வைக்கிறார்கள்.

சுவையான சாப்பாடு
கல்யாண வீட்டில் மொய் வைக்காம சாப்பிட்டது உண்டான்னுதான் அண்ணாச்சி கேட்டார். சூரியாவா நடிக்கற பொண்ணுகிட்ட கேட்டார். அதுக்கு புரியலை, மொய்ன்னான்னு கேட்க... கோபியின் முதல் தங்கச்சி அனுசுயா, கிஃப்ட் குடுக்காம சாப்பிடறதுடா...லைக் நாம பண்ணுவோமே... அதாவது வேனிலே போய்க்கிட்டே இருப்போம். பசிக்கும் நல்ல ஹோட்டல் இருக்காது. ஏதாவது கல்யாண மண்டபம், கல்யாண வீடு இருந்தா நிறுத்திருவோம். இறங்கும்போதே வாங்க வாங்கன்னு சிறப்பான வரவேற்பு இருக்கும். அவங்களே அழைச்சுட்டு போயி சாப்பிட வச்சுருவாங்கன்னு சொன்னார். எப்படி இருக்கு பாருங்க...
இயக்குநர் திருமுருகன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, அந்த பொண்ணை எப்படி திட்ட போறாரோ...

ரவுடி பயம் இல்லை
சூர்யாவா நடிக்கற பொண்ணுக்கு கராத்தே தெரியுமாம். அதனால், ரவுடிகளைப் பார்த்தால் பயமில்லை என்று சொன்னார்.இதைத்தானே தற்காப்பு கலையை பெண்களுக்கு கத்துக்க குடுங்கன்னு பெண்ணைப் பெத்த அப்பாக்களுக்கு காலம் காலமா சொல்லிக்கிட்டு வர்றது. தனக்கு வரப்போற கணவன் உயரத்திலிருந்து எல்லா விதத்திலும் தனக்கு பொருத்தமா இருக்கணும். முத்தம் கொடுக்க எக்கி குடுக்கற மாதிரி உயரம் இருக்க கூடாதுன்னு சொன்னார்.
ரோஜா சீரியலில் நடிக்கும் ரோஜா பிரியங்கா, தனக்கு வரப்போற புருஷன் ஆறு அடி உயரம் இருக்கணும்.அவர் நெஞ்சிலே சாய்ஞ்சால் இதயம் லப்டப்னு அடிக்கறது கேட்கணும் என்று சொன்னார்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆசை கனவு.

ஐயோடா நோ ரொமான்ஸ்
கோபியின் ரெண்டாவது தங்கச்சியாக நடிக்கும் டோனா, கூட்டு குடும்பம் நல்லதுதான். நானும், என் புருஷனும் வேலைக்கு போயாச்சுன்னா குழந்தையை பார்த்துப்பாங்க .நமக்கு டென்சன் இருக்காது ... ஆனா, கூட்டு குடும்பத்துல ரொமான்ஸ் பண்ணவே முடியாதுன்னு சொன்னார். அப்போ எப்போதான் ரொமான்ஸ் பண்றதும்மான்னு அண்ணாச்சி கேட்க, நமக்குன்னு இருக்கற ரூம்லதான் பண்ணனும். சாப்பிடும்போது, சமைக்கும் போது ரொமான்ஸ் பண்ணலாம்னு கிட்டே வந்தா அப்போதான் பாட்டி இப்படிப் போகும், தாத்தா இப்படி வரும்னு சொன்னார்.
சாப்பிடும்போது ஒரு ஃபிளையிங் கிஸ் கூட குடுக்க முடியாது..இருந்தாலும் கூட்டு குடும்பம்தான் பெஸ்ட். என்று சொன்னார்.

காதுல சொல்லுவேன்
எனக்கு தனிக் குடித்தனம்தான் பிடிக்கும்... அப்படி கூட்டு குடும்பத்தில்தான் வாழணும்னு சொன்னா, என் புருஷனுக்கு சொல்லிக் குடுத்து தனிக் குடித்தனம் போயிருவேன்னு சொன்னார். வாழக்கை ஜாலியா இருக்கணும்...புருஷன் வீட்டுல பொண்னு இருக்கறதுதான் மரியாதை, பொண்ணு வீட்டில் புருஷன் இருக்க கூடாதுன்னு சொன்னார். எல்லாரும் ரொம்ப தெளிவாத்தான் இருக்காங்க.


Click it and Unblock the Notifications











