Kalyana veedu serial: கல்யாணம் பண்ணிப் பாரு.. வீட்டை கட்டிப்பாரு!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல், நமது முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள், கல்யாணம் பண்ணிப் பாரு, வீட்டை கட்டிப் பாருன்னு. அதை உணர்த்துவதாக இருக்கிறது
மூணு தங்கச்சிங்களுக்கு அண்ணன் கோபி. முதல் தங்கச்சிக்கு கல்யாணம் செய்து, அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.ஆனால், புருஷன் ராம், இவளை விட்டு இன்னொருத்தி கூட வாழ்ந்து கொண்டு இருக்கான்.
ரெண்டாவது தங்கச்சிக்கு ஒரு வழியா கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. ஆனா, இப்போதுதாங்க மூணாவது தங்கச்சி கல்யாணம் முடிவு பண்ணிட்டு,கோபி படும் அவஸ்தைகள் மேற்கண்ட பழமொழியை உணர்த்துவதா இருக்கு.

கல்யாணம் சவீதாவுக்கு
கடைசி தங்கை சவீதாவுக்கு , பிச்சை என்கிற போலீஸ் கான்ஸடபிளை கல்யாணம் பேசி முடிக்கறாங்க. அப்போ ஆரம்பிக்குதுங்க கோபிக்கு பிரச்சனைகள். கூடவே இருக்கும் நண்பனின் தங்கை ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்க கொடுத்த வாக்குறுதி, சூர்யாவை தான் காதலிப்பதை மனத்துக்குள் பொத்தி வைத்ததால் வந்த ராஜாவின் பிரச்சனை..ராஜாவை காதலிக்கும் ரோஜாவால் பிரச்சனை என்று எல்லாத்தையும் சந்திச்சாச்சு.

கோபி காணாமல்
கடைசியில் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொன்ன கோபி, சவீதாவின் கல்யாணம் நெருங்கும் சமயத்தில் காணாமல் போயி, அங்கு எதோ ஒரு சிக்கல். அதை இன்னும் யாருக்கும் அவன் சொல்லலை. இப்படி பிரச்சனைகள் ஒடிக்கிட்டு இருக்கும் போது, இப்போது சவீதாவின் கல்யாணத்தில், அவள் நடந்துகொண்ட விதத்தால் அவள் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டி இருக்கிறது.

போதை பழக்கம்
டெல்லியில் கோபி குடும்பம் வசிக்கும் போது, அங்கு ஜித்து என்கிற ஒருவனால், சவீதா டார்கெட் செய்யப்பட்டு போதை பழக்கத்துக்கு சிறிது நாட்கள் அடிமையாகி விடுகிறாள்.அவளை காப்பாற்றி, குடும்பத்துடன் திருவையாற்றுக்கு அழைத்து வந்துடறான் கோபி. அவளை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு வருவது, தங்கையை காப்பாற்றி ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கணும்னு கோபி பாடுபடுவது என்று கதை குடும்ப பாசம், கட்டுக்கோப்பு என்று சென்று கொண்டு இருக்கிறது.

சவிதாவுக்கு பிரச்சனை
கல்யாணம் நெருங்க நெருங்க கோபியின் குடும்பமே சந்தோஷத்தில் இருக்கும் போது. சின்ன சின்னப் பிரச்சனை என்று சூர்யாவின் காதலை புரிந்து கொள்ளாமல் அவளின் அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது, ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்க வேண்டும் என்று ஸ்வேதாவின் அண்ணன் பிளாக் மெயில்செய்வது, ஸ்வேதா இதற்கு மறுப்பது இப்படி. இதையும் கடந்து வரும்போதுதான் ஜித்துவால் சவீதாவுக்கு ஆபத்து என்று பெரும் பிரச்சனை.

ஜீத்து கால்
விபத்தில் கால் இழந்த ஜித்து, திருவையாறுக்கு வந்து சவீதாவை கடத்தி பழி வாங்க துடிக்கிறான்., இந்த கல்யாணத்தை நிறுத்தவும் பல வழிகளில் முயற்சிக்க, அவனை பிடிக்கும் வேலைகள்... அவனின் ஆட்களிடம் இருந்து தங்கைகளை காப்பாற்ற வேண்டிய கடமை என்று எத்தனையை தூக்கி சுமப்பான் ஒரு அண்ணன். எப்போதுதான் சவீதாவின் கல்யாணம் நடக்குமோ என்றாகி விடுகிறது.


Click it and Unblock the Notifications











