Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
kalyana veedu serial: டைமிங் மன்னன்.. சரியாக யூஸ் செய்த திருமுருகன்....ஆனா இது இடிக்குதே!
சென்னை: சன் டிவி இப்போது புதிதாக ஒரு யுக்தியைக் கையாண்டு வருகிறது. அதாவது ஞாயிறு டபுள்ஸ் என்கிற பெயரில் பேக் டு பேக் திரைப் படங்கள் ஒளிபரப்பி வந்ததில் ஒரு படத்தை நிறுத்திவிட்டு, இரவு 9:30 மணி முதல் 10: 30 மணி வரை எதாவது ஒரு சீரியல் ஒளிபரப்ப நேரம் ஒதுக்கித் தருவது என்கிற யுக்தி.
அதன்படி நேற்று ஞாயிறு அன்று கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பானது. இந்த ஒரு மணி நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இயக்குநர் திருமுருகன், ஸ்வேதாவின் புருஷன் சுமனின் சந்தேகப் புத்தியை போக்கி, அவர்கள் குடும்பமாக வாழ வழி காண்பித்து இருக்கார்.
முதன் முறையாக ராசாத்தி சீரியலுக்கு இப்படி சன் டிவி நேரம் ஒதுக்கி தந்தது. அந்த சீரியல் குழுவும் ஒரு மணி நேரத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது.ஆனால், ரோஜா சீரியல் மட்டும் வழக்கம் போல் இழுவைக்காகவே பயன்படுத்திக் கொண்டது.

சுமன் சந்தேகம்
ஸ்வேதா புருஷன் சுமன் ஸ்வேதாவுடன் கோபியை இணைச்சு சந்தேகம் சந்தேகம் என்று பல வாரங்களாக சீரியல் கதை இப்படியே நகர்ந்தது. இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று யார் கூறினாலும் காதில் போட்டுக்கொள்ளாத திருமுருகன், சன் டிவி ஞாயிறு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்ததும். முடிவு கட்டிவிட்டார். சுமன் சந்தேகத்தில் துளியும் உண்மையில்லை, ஸ்வேதா ஒரு நெருப்பு என்று கோபியே நிரூபித்தால்தான் கதை முடியும் என்கிற கட்டத்துக்கு கதையைக் கொண்டு வந்து, சுமன் சந்தேகத்துக்கு முடிவும் கட்டிவிட்டார்.

விறுவிறுப்பான எபிசோட்
ஒரு மணி நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, மிக விறுவிறுப்பான எபிசோடாகவும் கொண்டு சென்று இருந்தார் திருமுருகன். அதிக எமோஷன், காட்டுக் கத்தல் என்று இல்லாமல் ஸ்வேதா சுமன் கதை முடிந்த நிலையில், அடுத்த கடைசி 15 நிமிஷத்துக்கு காட்டுக்கு கூச்சல் ஆரம்பிக்கும் நிலையைக் கொண்டு வந்தது மட்டும் கொஞ்சம் இழுவையாக இருந்தது.

இனி ஸ்வேதா குடும்பம்
ஸ்வேதா குடும்பம் டெல்லியில் புருஷன் சுமன், அண்ணன் நந்து, குழந்தை என்று செட்டிலாக சென்றுவிட்டார்கள். இனி அவர்கள் குடும்பத்தை எப்போதாவது கதைக்குத் தேவை எனும்போதுதான் திருமுருகன் கொண்டு வருவார். இனிமேல் கோபி குடும்பத்தின் கதை என்று கல்யாண வீடு சீரியல் ஒரு நிலைக்கு வந்துள்ளது. கல்யாண வீடு சீரியலில் இனி கோபி சூர்யா கல்யாணம்தான்...அதற்கான போராட்டம்தான்.

இது மட்டும் இடிக்குதே
ஸ்வேதா கதையிலேயே இனி இருக்க மாட்டார் எனும்போது, அவருடன் கோபி இருக்கும் போஸ்டரை நேற்றைய தினமாவது மாற்றி இருக்கலாமே.. கொஞ்சமும் அப்டேட் இல்லை என்றால் எப்படி? இன்னும் ஸ்வேதா கோபியின் தோளில் கைபோட்டது போன்ற போஸ்டர் அசிங்கமாக இல்லை? எத்தனை முறை சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டாரா இயக்குநர்?