சீரியல் நடிகரை கன்னத்தில் அறைந்த நடிகை கல்யாணி

By Mayura Akilan

ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வரும் கல்யாணி உடன் நடித்த நடிகரை பலமுறை கன்னத்தில் அடித்த விஷயம்தான் இப்போது சின்னத்திரை பக்கம் பரபரப்பாக பேசப்படுகிறது.

சினிமாவில் நடிப்புக் கற்றுத்தருகிறேன் என்று நடிகைகளின் கன்னத்தில் இயக்குநர்கள் அறைவார்கள். சிலர் தலையில் கொட்டுவார்கள்.

ஆனால் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நடிகரை ஹீரோயினாக நடிக்கும் கல்யாணி அறைந்துள்ளார். அதுவும் ஒருமுறையல்ல பலமுறையாம். இதற்கு கல்யாணியே விளக்கம் அளிக்கிறார் படியுங்களேன்.

நான்தான் ஆண்டாள்

நான்தான் ஆண்டாள்

ஆண்டாள் அழகர் ஆண்டாளாக நடிக்கிறேன். இந்த தொடரில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காதலனின் கன்னத்தில்

காதலனின் கன்னத்தில்

அழகராக நடிப்பவருடன் எனக்கு காதல். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அழகராக நடிப்பவரை நான் கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுத்தார்கள்.

அறைந்த கல்யாணி

அறைந்த கல்யாணி

வழக்கமாக கையை ஓங்கி கன்னம் வரை கொண்டு சென்று பிறகு எடுத்துவிடுவோம். பின்னணி இசையில் அடித்தது போன்று ஒலியை சேர்த்து விடுவார்கள்.

நிஜமாகவே அடித்தேன்

நிஜமாகவே அடித்தேன்

ஆனால் அழகர் என்னை நிஜமாகவே அடிக்கச் சொன்னார். அப்போதுதான் காட்சி நன்றாக வரும் நானும் நன்றாக எக்ஸ்பிரசன் காட்ட முடியும் என்றார். நான் தயக்கத்துடன் ஒத்துக் கொண்டு அப்படியே செய்தேன்.

நிறைய டேக் எடுத்தேன்

நிறைய டேக் எடுத்தேன்

அது பல டேக்குகள் போனதும் எனக்கு அழுகையே வந்தது. ஆனால் அவர்தான் தயங்காமல் அடிக்கச் சொன்னார். கடைசியில் காட்சியும் பிரமாதமாக வந்தது. மற்றபடி நான் நிஜ வாழ்க்கையில் விளையாட்டுக்காக கூட யாரையும் அடித்ததில்லை" என்கிறார் கல்யாணி.

நிஜமாகவே முத்தம் கேட்டா

நிஜமாகவே முத்தம் கேட்டா

சீரியலில் சீரியஸாக அடிக்கச் சொன்ன ஹீரோ, அதேபோல நடிக்கும் போது ரொமான்ஸ் சீனில் முத்தம் கேட்டா என்ன செய்வீங்க கல்யாணி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X