twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்வீட் போட்டால் போதுமா? களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும்… யாரைச் சொல்கிறார் கமல்?

    களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டுமென கமல்ஹாசன் கூறியுள்ளார்

    |

    சென்னை: ஓட்டு போடவேண்டுமென்றால் வேலை செய்யனும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் சீசனில் இருந்த ஜூலி ஓவியாபோல் யாரும் இல்லாததால், யாரைத் திட்டுவது யாரை புகழ்வது என ஒரு வித நியூட்ரல் மனநிலையில் மக்கள் உள்ளனர்.

    Kamal about troll in Biggboss promo!

    எண்பது நாட்களை எட்டியுள்ள நிலையில் இன்னும் மூன்றே வாரங்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார்கள் எனத் தெரிந்துவிடும்.

    இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் ட்வீட் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, களத்தில் இறங்க வேண்டும் என்கிறார் கமல்ஹாசன். " நெனச்சதெல்லாம் நடக்கனும்னா அதுக்காக வேலை செய்யனும். சும்மா வாய்ச்சொல்லில் வீரரா இருந்தால் போதாது. ட்விட்டர்லையும் ட்ரால்லையும் குமைந்தால் போதுமா? அதெல்லாம் நானும் செஞ்சிருக்கேன். என்கிறார்

    மேலும், களத்தில் இறங்கனும். ஓட்டு போடனும், ஓட்டு வாங்கனும் வாங்க வேண்டியவங்க. அப்படி வாங்கி விட்டால் பதர்றவங்க பதறுவாங்க... அதை விட்டுட்டு குத்துது கொடையுது வலிக்குதுன்னு சொல்லிகிட்டு இருந்தா யார் பொறுப்பு? ராத்திரி ஒன்பது மணிக்கு... பாருங்க எனச் சொல்லிவிட்டு நகர்கிறார்.

    இதைப் பார்க்கும்போது மும்தாஜுக்காக இப்படி பேசுகிறார் எனத் தெரிந்தாலும், அவர் அரசியலைச் சொல்கிறார் என்பது தெளிவாகிறது. மேலும், இன்று நிறைய அரசியல் பேசுவார் என்பதும் தெளிவாகிறது.

    English summary
    Kamalhaasan teases himself in Biggboss promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X