Bigg boss 3 tamil: பிக்பாஸ் சர்ச்சை.. குறும்படம் போட நம்மவருக்கு நேரம் வந்தாச்சு!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி, பிக் பாஸ், இப்போது இந்த நிகழ்ச்சி சீசன் 3 வரைக்கும் வந்தாச்சு. மூன்று சீசனுமே உலக நாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கறார்.

மற்ற மொழிகளில் நடப்பது போல பிக் பாஸ் , தமிழிலும் தொடர்ந்து நடக்கும் என்றும், கமலுக்கு பதில் இவர் நடத்துவர், அவர் நடத்துவார் என்றும் பேச்சுக்கள் எழுந்தாலும், வருஷத்துக்கு ஒரு முறை என்று கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார்.

இந்த மூன்றாவது சீசனில், முதல் வாரத்தில் செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு வெளியேற்றம் செய்யப்பட்டார். அடுத்து கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றம் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்பாளர்களுக்கு போட்டிகள் வைத்து, அந்த புள்ளிகளுக்கு ஏற்றவாறு யார் எந்த உணவுக்கு எந்த பொருட்கள் விரும்பி கேட்கிறார்களோ, அவைகளை பிக்பாஸ் வீடு ஒரு வாரத்துக்கு வழங்கும். இந்த டாஸ்க்கில், நேற்று புதிதாக அலாரம் டாஸ்க் ஒன்று வைத்திருந்தார்கள். ஒரு முறைக்கு மூன்று பங்கேற்பாளர்கள் அலாரம் இருக்கும் அறைக்குள் அனுப்பட்டு, டாஸ்க்கை செய்வார்கள், முதலில் சென்ற கவின், மீரா,சாண்டி இவர்களுக்குள், மீரா வந்ததே வேஸ்ட் என்பது போலவும், கவினும், சாண்டியும்தான் செய்தார்கள் என்றும் பேச்சு வந்ததாம்.

மீரா கவின்

மீரா கவின்

கவின் இதை மீராவிடம் பேசி, நீயும்தானே செய்தேன்னு விளக்கம் கொடுத்தும், அப்போதைக்கு சமாதானம் ஆனது போல பேசிய மீரா, தானும் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் புள்ளிகள் எடுக்க உதவியது யாருக்கும் தெரியாமல் போகும் என்று ஷெரீன், ரேஷ்மாவிடம் புலம்ப, கேப்டன் சாக்க்ஷி வரைக்கும் விஷயம் போனது. மீட்டிங் போட்டு, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய படுத்தணும்னு மீரா கேட்டுக்க, அதே மாதிரியே நடந்தது.

லூசு மாதிரி நடிக்கிறியா?

லூசு மாதிரி நடிக்கிறியா?

கவின் மறுபடி மீராவிடம் போயி, அப்போ ஓத்துக்கிட்டு, அப்புறம் எதுக்கு மீட்டிங் போட சொன்னேன்னு கேட்க, இல்லை கேப்டன்தான் மீட்டிங் போட்டு அறிவிக்கலாமான்னு கேட்டு அறிவிச்சாங்கன்னு மீரா சொல்றாங்க. நீதானே கேட்டு நான் ஹவுஸ் மேட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு, அனவுன்ஸ் பண்ணினேன்னு விளக்கமா சொல்லியும் மீரா குழப்ப, கடுப்பான சாக்க்ஷி, நீ லூசா,லூஸு மாதிரி நடிக்கிறியான்னு கேட்டுட்டாங்க.

கேட்ட குறும்படம்

கேட்ட குறும்படம்

என்னவோ மச்சி, எனக்கு ஒண்ணும் புரியலைன்னு மீரா நடிக்க, ஷெரின் நடந்ததை மீண்டும் விளக்கமா சொன்னார்.. எனக்கு தெரியலை மச்சி, யாராவது ரீ பிளே போட்டு காட்டினா நல்லாருக்கும்னு சொல்ல ஆரம்பிச்சுட்டார். மறுபடி என்ன... ராத்திரி படுத்துகிட்டு, அழறார். சோ...இந்த வாரம் கமல் சார் பிக்பாஸ் மூன்றாவது சீஸனின் முதன் முறையாக சர்ச்சை குறும்படத்தை போடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X