ஷெரினின் கடிதத்திற்கு உங்கள் பதில் என்ன? கடைசியில் தர்ஷனை கோர்த்துவிட்ட கமல்!

சென்னை: ஷெரின் கடந்த வாரம் எழுதிய கடிதத்திற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டு தர்ஷனை கமல் கோர்த்துவிட்டிருப்பது மூன்றாவது புரமோவில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் வருகை தந்தனர். அப்போது ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசிய அவர்கள், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சில டாஸ்க்குகளையும் கொடுத்தனர்.

அதில் ஒன்றுதான் கடிதம் எழுதும் டாஸ்க். இந்த டாஸ்க் ஷெரினுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. ஷெரினை தனக்கு பிடித்த ஒருவருக்கு கடிதம் எழுத சொல்லிவிட்டு, அதனை யாரிடம் காட்ட மாட்டோம் டெலிகாஸ்ட்டும் செய்யப்படாது என்றனர்.

காட்டப்பட்ட கடிதம்

காட்டப்பட்ட கடிதம்

இதனை நம்பி ஷெரின் கடிதம் எழுதினார். அந்த கடிதம் தர்ஷனுக்கு என்பது தெரிந்தது. மேலும் ஷெரின் கடிதம் எழுதும் போதே அதனை பிக்பாஸின் கேமராக்கள் படம் பிடித்தன. இதனால் ஷெரின் எழுதிய வார்த்தைகள் அப்போதே தெளிவாக காட்டப்பட்டன.

கிழிக்கப்பட்ட கடிதம்

கிழிக்கப்பட்ட கடிதம்

இதனை தொடர்ந்து ஷெரின் எழுதிய கடிதத்தை யாருக்கு எழுதினாரோ அந்த நபரிடம் கொடுக்குமாறு விருந்தாளிகளுக்கு உத்தரவிட்டார் பிக்பாஸ். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷெரின் அந்த கடிதத்தை எடுத்து கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார். இதனை தொடர்ந்து ஷெரின் எழுதிய கடிதத்தை யாருக்கு எழுதினாரோ அந்த நபரிடம் கொடுக்குமாறு விருந்தாளிகளுக்கு உத்தரவிட்டார் பிக்பாஸ். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷெரின் அந்த கடிதத்தை எடுத்து கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.

லெட்டர் மேட்டர்

லெட்டர் மேட்டர்

அதனை நோட்டம் விட்ட தர்ஷன் ஷெரின் குளிக்க சென்றபோது குப்பைத்தொட்டியை கிளறி கிழிந்த கடிதத்தை எடுத்து நண்பர்கள் உதவியுடன் ஒட்டி, அதனை படித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கடிதம் மேட்டரை கையில் எடுத்துள்ளார் கமல்.

கிழித்துபோட்ட சேதி என்ன?

கிழித்துபோட்ட சேதி என்ன?

இன்று வெளியான மூன்றாவது புரமோவில் அந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பேசும் கமல், ஒருவருக்கொருவர் என்ன சேதி சொல்லிக்கொண்டீர்கள்? கிழித்து போட்ட சேதி என்ன? சொல்ல மாட்டேன் என்கிறீர்கள், அவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறீர்கள்.

கடிதத்திற்கு பதில் என்ன?

கடிதத்திற்கு பதில் என்ன?

தெரிந்து விட்டது என்றால் நம்புவீர்களா என ஷெரினையும் தர்ஷனையும் கேட்கிறார் கமல். மேலும், தர்ஷன் கிழித்து போட்ட சேதியை படித்துவிட்டீர்களா என்று கமல் கேட்க, படித்துவிட்டேன் என்கிறார் தர்ஷன். தொடர்ந்து உங்கள் பதில் என்ன என தர்ஷனிடம் கேட்க பதில்.. என்று கேட்டு சிரித்து மழுப்புகிறார் தர்ஷன். இப்படியாக முடிகிறது மூன்றாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X