மடி கிடைத்த இடத்தில் எல்லாம் சாஞ்சுடுவீங்களா?: ஷாரிக்கை அதிர வைத்த கமல்

By Siva

சென்னை: பிக் பாஸ் வீடு கமல் வந்த பிறகே களைகட்டியது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனங்களே அதிகம். இந்நிலையில் வார இறுதிநாளான நேற்று கமல் ஹாஸன் வந்த பிறகு நிகழ்ச்சி சற்று சூடுபிடித்தது.

அதிலும் குறிப்பாக அவர் சென்றாயனை கலாய்த்ததை பார்த்தவர்களால் கை தட்டாமல் இருக்க முடியவில்லை.

வாய் சண்டை

வாய் சண்டை

முதல் சீசன் போட்டியாளர்களை இரண்டாவது சீசனில் தேடாதீர்கள் என்று கமல் வழங்கிய அறிவுரை அழகு. சினிமாவில் கை சண்டை, கால் சண்டையை பார்த்த நான் வாய் சண்டையை எதிர்பார்த்து இங்கு வந்திருக்கிறேன் என்று பொன்னம்பலம் கமலிடம் தெரிவித்தார்.

யாஷிகா

யாஷிகா

ஐஸ்வர்யா, யாஷிகா தமிழில் பேசுவதை பாராட்டினார் கமல். சிசிடிவி கேமரா முன்பு வந்து தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசி பிக் பாஸையே கடுப்பேற்றிய சென்றாயனிடம் சுத்த ஆங்கிலத்தில் பேசி புரிகிறதா என்று கேட்டு அசத்தினார் கமல். நீங்கள் ஆங்கிலத்தில் பேசியபோது எங்களுக்கு இப்படி தானே காண்டாகியிருக்கும் என்பதை அழகாக காட்டிவிட்டார் கமல்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

கமல் கட கடவென ஆங்கிலத்தில் பேச ஒரு வார்த்தை கூட புரியாமல் விழித்தார் சென்றாயன். நீங்கள் பேசிய ஆங்கிலம் இப்படித் தான் இருந்தது என்று சென்றாயனுக்கு குட்டு வைத்தார் கமல். நீங்கள் 1947க்கு முன்பு பிறந்திருந்தால் இங்கேயே தங்கி இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துவிட்டு தான் போவேன் என்று வெள்ளைக்காரன் அடம்பிடித்திருப்பான் என்று ஒரே போடாக போட்டார் கமல். எங்களுக்கும் புரிய வேண்டும் என்றால் நீங்கள் நிஜ ஆங்கிலம் பேச வேண்டும்என்றா் கமல்.

தமிழ்

தமிழ்

உங்களின் தாத்தா வாஷிங்டனில் தமிழ் திருமணம் செய்தவர். ஆனால் நீங்களோ தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்சியில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். நித்யா, மும்தாஜும் அதிகமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள் என்று கூறினார் கமல்.

ஷாரிக்

ஷாரிக்

ஷாரிக் ரம்யாவின் மடியில் படித்திருந்ததை ரசிகர்கள் மட்டும் அல்ல கமலும் கவனிக்கத் தவறவில்லை. அதை சுட்டிக் காட்டி நீங்க என்ன ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறீர்களா, மடி கிடைக்கும் இடத்தில் எல்லாம் சாய்ந்துவிடுகிறீர்கள் என்று சூப்பராக கேட்டார் கமல்.

அழுகை

அழுகை

மும்தாஜை அம்மா போன்று பார்ப்பதாக ஷாரிக் தெரிவித்ததும் அவர் கண் கலங்கினார். பொன்னம்பலம் எனக்கு அப்பா மாதிரி இருக்கிறார் என்றார். மும்தாஜ் அழ அவரை பார்த்து ஷாரிக் அழ அவர்களை பார்த்து கமலே கண்கலங்கிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X