ப்ளு ஜீன்ஸ்.. வொயிட் ஷர்ட்.. க்ளீன் ஷேவ்டு.. செம க்யூட்.. கமலை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் படு ஹேன்ட்சமாக தோன்றியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பது முதல் சீசனில் இருந்தே வழக்கமாக நடைபெறுகிறது. அந்த வகையில் சனிக்கிழமையான இன்று நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார்.

அப்போது கமல் பேசும் விஷயத்தை ரசிக்கும் அளவுக்கு கமலின் உடை, ஸ்டைல் என அனைத்தையும் ரசிப்பார்கள் அவரது ரசிகர் பெருமக்கள். அவரது உடை குறித்து சமூக வலைதளங்களிலும் கருத்து கூறி மகிழ்வார்கள்.

நீண்ட நேரம் காத்திருப்பு

நீண்ட நேரம் காத்திருப்பு

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. புரமோவுக்காக ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் தற்போது முதல் புரமோ வெளியாகியிருக்கிறது.

வெள்ளை சட்டை

வெள்ளை சட்டை

இதில் நடிகர் கமல்ஹாசன், நீல நிற ஜீன்ஸ், வெள்ளை நிற சட்டை என அசத்தலாக வந்துள்ளார். இந்தியன் 2வுக்காக ஏற்கனவே க்ளீன் ஷேவ் செய்துள்ள கமல் இன்று அதே கெட்டப்பில் பளிச்சென வந்துள்ளார். அவரை பார்த்து அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

மாசா இருக்கார்

இதைத்தான் பொழுது சாய்ர வரை எடிட் பண்ணீங்களா? ஆனா பரவாயில்லை பொழச்சு போங்க.. கமல் சார் ரொம்ப இளமையா இருக்காரு. இந்த கெட்டப்புல மாசா இருக்காரு.. அதனால உங்களை மன்னிச்சு விடுறேன். கமல் சார் அழகனே.. செமயா இருக்கீங்க சார் ஜீன்ஸ்ல ஐ லவ் யூ கமல் சார் என்கிறார் இந்த ரசிகை.

அருமையா இருக்கீங்க

கமல் சார் பார்க்க அருமையா இருக்கீங்க சார்.. ஆனா எபிசோடு மொக்கையா இருக்கும்னு தோனுது.. நேத்து ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சா குருநாதா? என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சூப்பர் டூப்பர் க்யூட்

கமல் சூப்பர் டூப்பர் க்யூட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஹார்ட்டின்

உலகநாயகன் என ஹார்ட்டின் போட்டு தனது அன்பை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X